7 ஜனவரி 2013
தின பலன்
ராசி குணங்கள்
மேஷம்
முகமலர்ச்சியுடன் காணப்படுவீர்கள். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பணப்பற்றாக்குறை நீங்கும். வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். வாகனத்தை சீர்செய்வீர்கள். கன்னிப்பெண்களுக்கு பெற்றொரின் ஆதரவு கிட்டும். மாணவர்கள் உயர்கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவார்கள். வாகனவசதி பெருகும். அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறங்கள் : க்ரீம் வெள்ளை, ஆரஞ்சு
ராசி குணங்கள்
ரிஷபம்
தன்னம்பிக்கை துளிர்விடும். தைரியமான முடிவுகளை எடுப்பீர்கள். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சியுண்டு. வருங்காலத் திட்டங்களைப் பற்றி நண்பர்களிடம் விவாதிப்பீர்கள். தாயாரின் உடல்நிலை சீராக இருக்கும். கண் எரிச்சல், தூக்கமின்மை விலகும். உத்தியோகத்தில் திறமைகளை வெளிப்படுத்த நல்ல சந்தர்ப்பங்கள் அமையும். வாழ்க்கைத் துணையின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறங்கள் : வெள்ளை, நீலம்
ராசி குணங்கள்
மிதுனம்
இன்று திறம்பட செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். ஆடம்பரச் செலவுகளை குறைப்பீர்கள். ஆன்மிகவாதிகளின் சந்திப்பு நிகழும். வியாபாத்தில் மறைமுகப் போட்டிகளை வெல்வீர்கள். அரசு விஷயங்களில் அனுகூலமான நிலைக் காணப்படும். வெளிவட்டாரத்தொடர்பு அதிகரிக்கும். முன்கோபம், வீண் டென்ஷன் விலகும். அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறங்கள் : சில்வர் கிரே, மயில் நீலம்
ராசி குணங்கள்
கடகம்
இன்று நம்பிக்கைக்குரியவர்களின் சந்திப்பு நிகழும். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிட்டும். கையில் காசுபணம் தேவையான அளவு இருக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரி, சகஊழியர்களின் ஆதரவு கிட்டும். வியாபாரத்தில் மகிழ்ச்சியுண்டு. மாணவர்களின் எண்ணங்கள் பூர்த்தியாகும். அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறங்கள் : ப்ரவுன், மஞ்சள்
ராசி குணங்கள்
சிம்மம்
புதுமுயற்சிகள் வெற்றியடையும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு சுமுகமான தீர்வு கிடைக்கும். புண்ணியத் தலங்கள் சென்று வருவீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைப்பீர்கள். வெளிவட்டாரத்தொடர்பு அதிகரிக்கும். தலைச்சுற்றல், வயிற்றுவலி விலகும். கன்னிப்பெண்கள் உற்சாகத்துடன் காணப்படுவார்கள். பணவரவு உண்டு. அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறங்கள் : ரோஸ், ப்ரவுன்
ராசி குணங்கள்
கன்னி
எதார்த்தமாக பேசி அனைவரையும் வியக்க வைப்பதுடன் தடைப்பட்ட காரியங்களையும் விரைந்து முடிப்பீர்கள். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பிள்ளைகளின் பிடிவாதத்தை ரசிப்பீர்கள். விருந்தினர்கள், நண்பர்களின் வருகையுண்டு. வெளியூர் பயணங்கள் திருப்திகரமாக அமையும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். மாணவ, மாணவிகளின் நினைவுத்திறன் பெருகும். அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறங்கள் : வைலெட், இளஞ்சிவப்பு
ராசி குணங்கள்
துலாம்
ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் உங்களை அறியாமலேயே தாழ்வு மனப்பான்மை தலைத் தூக்கும். பிள்ளைகள் பிடிவாதகமாக இருப்பார்கள். முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். கொஞ்சம் சிக்கனமாக இருங்கள். வியாபாரத்தில் பணியாட்களால் டென்ஷன் ஏற்படும். உத்தியோகத்தில் பிறரின் குறைகளை சுட்டிக் காட்ட வேண்டாம். அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறங்கள் : க்ரீம் வெள்ளை, ப்ரெவுன்
ராசி குணங்கள்
விருச்சிகம்
கணவன்-மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. வாகனத்தை இயக்கும் போது அலைப்பேசியில் பேச வேண்டாம். சகோதர வகையில் அலைச்சல் உண்டு. லேசாக தலை வலிக்கும். வியாபாரத்தில் பழைய பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறங்கள் : மஞ்சள், பிங்க்
ராசி குணங்கள்
தனுசு
இன்று மனக்குழப்பங்கள் விலகி தெளிவு பிறக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். உடன்பிறந்தவர்களால் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் மகிழ்ச்சியுண்டு. பெற்றோரின் உடல் நிலை சீராக இருக்கும். வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லைகள் விலகும். அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறங்கள் : சில்வர் கிரே, ப்ரவுன்
ராசி குணங்கள்
மகரம்
வெளியூர் பயணங்கள் திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தினருடன் மனம்விட்டுப் பேசுவீர்கள். பிள்ளைகளின் உணர்வுக்கு மதிப்பளிப்பீர்கள். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். அலுவலகத்தில் மதிக்கப்படுவீர்கள். வாகனபழுது சீராகும். வழக்கிகளிலிருந்த தேக்க நிலை மாறும். தாயாரின் உடல் நிலை சீராக அமையும். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறங்கள் : ஆரஞ்சு, பச்சை
ராசி குணங்கள்
கும்பம்
பிரியமானவர்களை கலந்தாலோசித்து முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வியாபாரத்தில் மறைமுக போட்டிகளை வெல்வீர்கள். தந்தையின் உடல் நலம் சீராகும். கையில் காசு பணம் தேவையான அளவு புரளும். சொந்தம்-பந்தங்களுக்கு மத்தியில் மதிக்கப்படுவீர்கள். அரசியல்வாதிகளின் நட்பு கிடைக்கும். நீண்டநாளாக நினைத்திருந்த காரியத்தை இப்பொழுது செய்து முடிப்பீர்கள். அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறங்கள் : மெரூண், ப்ரவுன்
ராசி குணங்கள்
மீனம்
சந்திராஷ்டமம் நீடிப்பதால் இனந்தெரியாத கவலைகள் வந்து நீங்கும். உறவினர்கள், நண்பர்களின் அன்புத் தொல்லை அதிகரிக்கும். கோபத்தால் இழப்புகள் ஏற்படும். பணம், நகையை கவனமாக கையாளுங்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். உத்தியோகத்தில் சக ஊழியரின் வேலையையும் சேர்த்துப் பார்க்க வேண்டி வரும். அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறங்கள் : மெரூண், ஆரஞ்சு