3 ஜனவரி 2013
தின பலன்
ராசி குணங்கள்
மேஷம்
இன்றைய தினம் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும்.உங்களைச் சுற்றியிருப்பவர்களால் இருந்து வந்த தொந்தரவுகள் விலகும். குடும்பத்தினருடன் மனம் விட்டுப்பேசுவீர்கள்.பிள்ளைகள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள்.உத்தியோகத்தில் சகஊழியர்களின் ஆதரவு கிட்டும்.அரசு காரியங்ளில் ஆர்வம் காட்டுவீர்கள்.வயிற்றுவலி,தலைசுற்றல் விலகும்.வாகனத்தை சீர் செய்வீர்கள். அதிர்ஷ்ட எண்:4 அதிர்ஷ்ட நிறங்கள்:ஆலிவ் பச்சை,வெள்ளை
ராசி குணங்கள்
ரிஷபம்
இன்றைய தினம் சோர்வு நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள்.நீங்கள் பார்க்க நினைத்த நபரே உங்களை வந்து சந்தித்து மகிழ்ச்சியில் ஆழ்த்துவார்.கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும்.பணவரவு சீராக இருக்கும். பிள்ளைகளின் தேவையை பூர்த்தி செய்வீர்கள். சகோதர வகையில் மகிழ்ச்சியுண்டு.வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகளை வெல்வீர்கள். அதிர்ஷ்ட எண்:2 அதிர்ஷ்ட நிறங்கள்:அடர் சிவப்பு,இளம்மஞ்சள்
ராசி குணங்கள்
மிதுனம்
குடும்பத்தினரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகளின் வருங்காலத்திற்காக முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.நல்லவர்களின் நட்பு கிடைக்கும்.வீண் விவாதங்களை தவிர்ப்பீர்கள்.வாகனத்தை சீர்செய்வீர்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமை குறையும்.சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும்.வருந்தினர்கள்,நண்பர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சியுண்டு.ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். அதிர்ஷ்ட எண்:1 அதிர்ஷ்ட நிறங்கள்:ஊதா,ரோஸ்
ராசி குணங்கள்
கடகம்
இன்றைய தினம் தன்னம்பிக்கையுடன் காணப்படுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது.பிள்ளைகளின் கோபம்,அலட்சியப் போக்கு மாறும்.பழைய நினைவுகள் நெஞ்சில் நிழலாடும்.உறவினர்கள்,நண்பர்கள் மதிப்பார்கள். பணப்பற்றாக்குறை நீங்கும்.வியாபரத்தில் லாபம் உண்டு. உத்தியோகத்தில் தடைபட்ட வேலைகளை விரைந்து முடிப்பீர்கள்.வீண் அலைச்சல் நீங்கும். அதிர்ஷ்ட எண்:7 அதிர்ஷ்ட நிறங்கள்:ப்ரவுன்,கிரே
ராசி குணங்கள்
சிம்மம்
மாலை 5 மணி வரை ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் வேலைகளை உடனே முடிக்க வேண்டுமென நினைப்பீர்கள். வீட்டிலும், வெளியிலும் மற்றவர்களை அனுசரித்துப் போங்கள். யோகா, தியானத்தில் மனம் லயிக்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்தியோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது நல்லது. மாலையிலிருந்து தடைப்பட்ட வேலைகள் முடியும். அதிர்ஷ்ட எண்:8 அதிர்ஷ்ட நிறங்கள்:க்ரீம் வெள்ளை,ஆரஞ்சு
ராசி குணங்கள்
கன்னி
கணவன்-மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். உறவினர், நண்பர்கள் சிலர் உதவி கேட்டு தொந்தரவு தருவார்கள். வெளிவட்டாரத்தில் நிதானம் அவசியம். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. மாலை 5 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் எதிலும் கவனமுடன் செயல்படப்பாருங்கள். அதிர்ஷ்ட எண்:5 அதிர்ஷ்ட நிறங்கள்:வெள்ளை,நீலம்
ராசி குணங்கள்
துலாம்
எடுத்த வேலையை தடையின்றி முடிப்பீர்கள்.வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகளை வெல்வீர்கள்.அரசாங்க அதிகாரிகளின் நட்பு கிடைக்கும்.கணவன்- மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும்.பிள்ளைகளின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள்.ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.அக்கம்&பக்கம் வீட்டாரின் அன்புத்தொல்லைகள் விலகும்.பயணங்கள் மகிழ்ச்சி தரும். அதிர்ஷ்ட எண்:3 அதிர்ஷ்ட நிறங்கள்:சில்வர் கிரே,மயில் நீலம்
ராசி குணங்கள்
விருச்சிகம்
இன்றையதினம் சொன்ன சொல்லைக் காப்பாற்ற அதிரடியாக செயல்படுவீர்கள்.பணவரவு திருப்தி தரும்.கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும்.உடல் நலம் சீராகும்.தாய்வழி உறவினர்களால் நன்மையுண்டு. பிரியமானவர்களைச் சந்தித்து மகிழுவீர்கள்.உடன் பிறந்தவர்கள் உறுதுணையாக நடந்துக் கொள்வார்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். அதிர்ஷ்ட எண்:6 அதிர்ஷ்ட நிறங்கள்:ப்ரவுன்,மஞ்சள்
ராசி குணங்கள்
தனுசு
சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள்.அரசாங்க காரியங்களிலிருந்த பின்னடைவு நீங்கும். வயிற்றுவலி, மனஉளைச்சல் நீங்கும்.விடாப்பிடியாக செயல்பட்டு பணிகளை முடிப்பீர்கள்.வியாபாரத்தில் நம்பிக்கைக்குரியவர்களின் ஆலோசனையை ஏற்பீர்கள்.பயணங்கள் மகிழ்ச்சி தரும். அதிர்ஷ்ட எண்:9 அதிர்ஷ்ட நிறங்கள்:ரோஸ்,ப்ரவுன்
ராசி குணங்கள்
மகரம்
மாலை 5 மணி வரை சந்திராஷ்டமம் தொடர்வதால் அசதி, சோர்வு வந்து நீங்கும். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து யோசிப்பீர்கள். தடைப்பட்ட வேலையை மாறுபட்ட அணுகுமுறையால் முடித்துக் காட்டுவீர்கள். சிலவற்றிற்கு உங்கள் அவசர முடிவுகள் தான் காரணம் என்பதை உணர்வீர்கள். வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். உத்தியோகத்தில் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் வெற்றி பெறுவீர்கள். அதிர்ஷ்ட எண்:6 அதிர்ஷ்ட நிறங்கள்:வைலெட்,இளஞ்சிவப்பு
ராசி குணங்கள்
கும்பம்
குடும்பத்தில் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். புது நட்பு மலரும். செலவுகளை குறைக்க திட்டமிடுவீர்கள். தாய்வழியில் ஆதரவுப் பெருகும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் லாபம் வரும். உத்தியோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். மாலை 5 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எச்சரிக்கையுடன் செயல்படப்பாருங்கள். அதிர்ஷ்ட எண்:7 அதிர்ஷ்ட நிறங்கள்:க்ரீம் வெள்ளை,ப்ரெவுன்
ராசி குணங்கள்
மீனம்
இன்றையதினம் மனதில் பட்டதை பளிச்சென்று பேசி அனைவரையும் ஆச்சர்யப்படுத்துவீர்கள். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும்.ஆடம்பரச்செலவுகளை குறைப்பீர்கள்.ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் மகிழ்ச்சி தங்கும்.பழைய சரக்குகளை புது யுக்தியால் விற்றுத்தீர்ப்பீர்கள்.வெளிவட்டாரத்தொடர்பு அதிகரிக்கும்.வாகனத்தை சீர்செய்வீர்கள். அதிர்ஷ்ட எண்:1 அதிர்ஷ்ட நிறங்கள்:மஞ்சள்,பிங்க்