Author Topic: நிஜம் நிழலாகியது...  (Read 2681 times)

Offline JS

நிஜம் நிழலாகியது...
« on: August 03, 2011, 11:12:54 AM »
ஒரு துணை என நாடினேன்
என் வரம் என தேடினேன்
சில நொடியில் நான் வாடினேன்
தொலைதூரம் ஓடினேன்...

கண்மணியே...
என் வாழ்வு முடியவில்லை
நீடித்து இருக்கிறது உன் அன்பினால்...

என் தேவைகள் உனக்காக
என் சேவைகள் உனக்காக
உன் அன்பு மட்டும் எனக்காக...

விழியோரம் கெஞ்சினேன்
என்னை பிரியாதே என்று
மொழி பேச தெரிந்தவளே
எனக்கு வழி காட்ட வருவாயா ?...

என் நிஜ உலகின் பூ மகளே !
என்னை நிழலில் த்ள்ளினாய் !
என் நிஜம் நிழலாக நீ எண்ணுகிறாய்
என் செய்வேன்...!!!
JS
நம்பிக்கையே வாழ்வின் அடிப்படை

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 601
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: நிஜம் நிழலாகியது...
« Reply #1 on: August 03, 2011, 02:42:36 PM »
ஒரு துணை என நாடினேன்
என் வரம் என தேடினேன்
சில நொடியில் நான் வாடினேன்
தொலைதூரம் ஓடினேன்...

inimayana kavithai... ;)