Author Topic: வண்ணப்பிறைகள்  (Read 591 times)

Offline Anu

வண்ணப்பிறைகள்
« on: July 04, 2012, 01:56:54 PM »
நினைவின் இமைகளில்
ஒவ்வொரு முறையும்
அமர்த்துகிறாய்
ஒரு துளி உற்சாகத்தை
அந்த முதல் சந்திப்பினைப்போலவே!

***

உதிர அணுக்களில்
வியர்வை உப்புக்களில்
முத்த ஈரத்தில்
கருவிழியின் வெளிச்சத்தில் …
இடையறக் கலந்திருக்கும்
இனிய மாயம் ஒருபோதும்
புரிவதேயில்லை…


***

என்னை நீயும்
உன்னை நானும்
அறியும் முன்னேயும்
கடந்து போயிருக்கின்றன
எத்தனையோ பிறைகள்…

என்னை நீயும்
உன்னை நானும்
அறிந்த பின்னும்
கடந்து போகின்றன
எத்தனையோ பிறைகள்
வண்ணங்களைத் தூவியபடி


Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 120
  • Total likes: 120
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Re: வண்ணப்பிறைகள்
« Reply #1 on: July 06, 2012, 07:20:48 AM »

என்னை நீயும்
உன்னை நானும்
அறிந்த பின்னும்
கடந்து போகின்றன
எத்தனையோ பிறைகள்
வண்ணங்களைத் தூவியபடி

அருமை

வரிகளில் அழகு மிளிர்கின்றது


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்