என் தேவதை நீ அல்லவா ?
உனக்கு மட்டும் ஒரு ரகசியம் சொல்கிறேன்
நான் எழுதும் கவிதைகள் எல்லாம் எல்லோராலும்
ரசிக்கபடுவதன் ரகசியம் சொல்கிறேன் , கேளடி கண்மணி !
என் ஒவ்வொரு கவிதையும் , ஒவ்வொரு வரிகளும்
ஒவ்வொரு வாக்கியமும்,.ஒவ்வொரு வார்த்தையும்,
ஏன் ஒவ்வொரு எழுத்தையும் , உயிர்க்கவிதையே !
உன்னைவிட அழகாய் படைக்க எண்ணி,
முனைந்தும் முடியாத தோல்வி கவிதைகளே !