Author Topic: ~ காரசார நெத்திலி மீன் ப்ரை! ~  (Read 1015 times)

Offline MysteRy

காரசார நெத்திலி மீன் ப்ரை!



நெத்திலி மீன் சிறியதாக இருக்கும். இந்த மீனை முள்ளோடு சாப்பிடலாம். இந்த மீன் குழம்பு வைக்கவும், வறுவல் செய்யவும் ஏற்றது. குழந்தைகளுக்கு அதிக அளவில் கொடுக்கலாம். அதீத சுவை கொண்ட மீன் இது.


தேவையான பொருட்கள்

நெத்திலி மீன் - 1/4 கிலோ

மிளகாய்த்தூள் - 2 டீ ஸ்பூன்

இஞ்சி, பூண்டு பேஸ்ட் – 2 டீ ஸ்பூன்

மஞ்சள்தூள் - 1/4 டீ ஸ்பூன்

எலுமிச்சை - 1

கார்ன்ப்ளவர் - 2 டீ ஸ்பூன்

எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு

உப்பு - சுவைக்கு

செய்முறை

மீனை தலையை நீக்கி சுத்தம் செய்து கொள்ளவும். நன்றாக தண்ணீரில் அலசி நீரை வடித்து மீனை உலர்வாக வைக்கவும். பின்னர் மிளகாய்த்தூள், உப்பு, இஞ்சி, பூண்டு, எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக பிசிறிவிடவும், பின்னர் கார்ன்ப்ளவர் சேர்த்து கலக்கவும். ஒருமணி நேரம் ஊறவிடவும்.

அடுப்பில் தோசைக் கல்லை வைத்து எண்ணெய் ஊற்றவும். காய்ந்த உடன் மீனை வரிசையாக வைத்து ஸ்டவ்வை மிதமாக எரிய விடவும். மீனை திருப்பி போட்டு பொன்னிறமாகும் வரை வேகவிட்டு எடுக்கவும். காரசாரமான நெத்திலி மீன் ப்ரை ரெடி. கொத்தமல்லி அலங்கரித்து பரிமாறவும்.