Author Topic: பிறையிடம் என் குறை...  (Read 548 times)

Offline supernatural

பிறையிடம் என் குறை...
« on: June 30, 2012, 06:16:03 PM »

மனம் தனிமையில் தவிக்கும் ...
அந்த இருண்ட பொழுதுகளை..
வேகமாய் கடத்திட....
எனக்கு துணையாய்
உற்ற  தோழியாய் நிலவுப்பெண்...
பிறைமதியாய்...
என் முன்னே வந்து...
ஆறுதலாய் இருக்க எண்ண..
ஏமாற்றமே மிச்சமாய் ....
என்னவன்  என்னருகே இல்லாத குறையை ...
பலநேரம்  பெருந்துணையாய் இருந்த...
நிலவாலும் தீர்க்க இயலவில்லையே...
இந்த புதுமாற்றத்தின் காரணம் தான் என்னவோ...?
மனதில் எழுந்த புது கேள்வி இது...
கேள்விக்கு பதில்தேடி நான்...என் மனது....
http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcQdMq57K4XtAqY3Ae5pj_6NBM-UYsBslmHF6iA1cIzV4OAOA4qw
supernatural

நேசத்தை உணர்ந்தேன்....
      உன் இதயத்தில் ..!!!!!