வணக்கம் RJs & DJs,
இந்த வாரம் இசைத் தென்றல் நிகழ்ச்சியில் இடம்பெற்றது மகிழ்ச்சி.இந்த முறை நான் விரும்பும் பாடல் இடம் பெற்ற திரைப்படம்
காதல் வைரஸ்
2002ஆம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படம் காதல், உணர்ச்சி மற்றும் இசை ஆகியவற்றை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. படம் பெரிய வரவேற்பை பெறவில்லை, ஆனால் அதன் இசை மற்றும் காட்சி அமைப்புகள் (visuals) விமர்சகர்களால் பாராட்டப்பட்டது. தற்போது ஒரு கல்ட் கிளாசிக் (cult classic) என்று சிலரால் நினைவில் வைக்கப்படுகிறது, குறிப்பாக இசை ரசிகர்களால்.
நடிகர்கள்: ரிச்சர்டு, ஸ்ரீதேவி, விவேக், அப்பாஸ், ரகுவரன், மனோரமா
இயக்கம்: கதிர்
இசை: ஏ.ஆர்.ரகுமான்
இப்படத்தில் என்னுடைய விருப்ப பாடலாக நான் தேர்வு செய்வது
பைலாமோர் பைலாமோர் பாடல்
வரிகள்: கவிஞர் வாலி
குரல்: சிலம்பரசன், திப்பு
பிடித்த வரிகள்:
மெல்லிடை என்பது மின்னலானதா
மென்னடை என்பது தென்றல் ஆனதா
தேய்பிறை நிலவு ஆடையானதா
பௌர்ணமி நிலவுபாவையானதா
இசைத் தென்றலின் RJக்களுக்கும், DJக்களுக்கும் நன்றியும், வாழ்த்துகளும். நிகழ்ச்சிக்கு ஆதரவும் தரும் FTCயின் அனைத்து நண்பர்களுக்கும் இந்த பாடலை டெடிக்கேட் பண்றேன்.
நன்றி.