Hi RJ & DJ
இந்த வாரம் விரும்பி கேட்ட பாடல் இடம் பெற்ற திரைப்படம்
விடுதலை பாகம் - 1 தமிழ் மொழி வரலாற்று நாடகக் குற்றவியல் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தை வெற்றிமாறன் எழுதி இயக்கியுள்ளார். ஆர் எஸ் இன்போடெர்மன்ட் நிறுவனத்தின் எல்ரெட் குமார் தயாரித்துள்ளார். இத்திரைப்படத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திர்க்கு இளையராஜா இசையமைத்து, வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இத்திரைப்படம் எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.
ஒரு பிரிவினைவாதக் குழுவின் தலைவரைக் கைது செய்ய நியமிக்கப்பட்ட ஒரு போலீஸ் கான்ஸ்டபிளைப் பின்தொடர்கிறது, ஆனால் விரைவில் நெறிமுறை சிக்கல்களில் சிக்கிக் கொள்கிறது. சூரி , விஜய் சேதுபதி , பவானி ஸ்ரீ , கௌதம் வாசுதேவ் மேனன் , ராஜீவ் மேனன் , இளவரசு , பாலாஜி சக்திவேல் , சரவண சுப்பையா , சேத்தன் , மூணார் ரமேஷ் மற்றும் பாவெல் நவகீதன் ஆகியோர் நடித்துள்ளனர்
இப்படத்தில் 3 பாடல்கள் இடம் பெற்றுள்ளன
எனக்கு பிடித்த பாடல்
வழிநெடுக காட்டுமல்லி
இப்பாடலை இளையராஜா,
அனன்யா பட்5 பாடியுள்ளார்கள் .