Author Topic: சந்தோஷமான நேரம்  (Read 2096 times)

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 120
  • Total likes: 120
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
சந்தோஷமான நேரம்
« on: June 22, 2012, 07:55:15 PM »
ஒரு பொறியியல் கல்லூரி வாசல் முன் தம் பிள்ளையை படிக்க வைக்க வந்த பெற்றோர்...

பெற்றோர் : இந்த காலேஜ் நல்ல காலேஜா?

வாட்ச்மேன் : ரொம்ப நல்ல காலேஜ். இங்க படிச்சா வேலை ரொம்ப ஈசியா கிடைக்கும்.

பெற்றோர் : அப்படியா!!

வாட்ச்மேன் : ஆமா. நானும் இந்த காலேஜ்ல தான் எஞ்சினியரிங் படிச்சேன். படிச்ச முடிச்ச உடனே இங்கேயே இந்த வேலை கிடைச்சிடுச்சு

----------------------------------------------------------------------

.இரண்டு காதலர்கள் தற்கொலை செய்ய முடிவெடுத்து மலை உச்சிக்குச் சென்றனர். இருவரும் கண்ணை மூடிக்கொண்டு குதிக்கத் தயாராகினர். காதலன் முதலில் குதிக்க, காதலி 'காதலுக்குக் கண்ணில்லை என்பதை உணர்ந்துவிட்டேன்' என்று கூறிக்கொண்டு பின்வாங்கி விட்டாள்.

பாதாளத்திற்குப் போய்க்கொண்டிருந்த காதலன், 'தெரியும்டீ உங்களப்பத்தி' என்று கூறிக்கொண்டு முதுகில் மறைத்து வைத்திருந்த பாராசூட்டை விரித்துக்கொண்டு பறந்தான்.

----------------------------------------------------------------------------
"நா‎ன் இந்தக் கோவிலுக்கு நாலு வருஷமா வந்துட்டிருக்கேன்.. தெரியுமா?"

"உங்க வீடு எ‎ன்ன அவ்வளோ...தூரமா இருக்கு?"

--------------------------------------------------------------------

"ஏங்க.. நாளைக்குத்தான் நம்ம கல்யாண நாள். எப்படிக் கொண்டாடலாம்?"

"ரெண்டு நிமிஷம் மவுன அஞ்சலி செலுத்துவோம்!"

 


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்