Author Topic: நிழற்படம் தேக்கிய கணம்  (Read 759 times)

Offline Anu

அந்தந்தக் கணங்களை
தேக்கிவைத்த நிழற்படங்கள்
படிந்த கோப்பினை
விரல்கள் புரட்டிக்கொண்டிருக்கிறது

தீர்ந்துபோன நிகழ்காலத்தை
உள்ளடக்கம் குறித்து
கவலைகளற்று
இறுமாப்போடு தனக்குள்
கவ்விப்பிடித்துக்கொண்டிருக்கிறது

செத்துப்போய் சேமிக்கப்பட்ட
அந்த நிகழ்காலம்
ஒப்பனையேதுமின்றி
அடைகாக்கப்படுகிறது அதனுள்ளே!

ஆனாலும்….
கண்களின் தேடலில்
விரல்களின் நகர்த்தலில்
ஒரு உணர்வின் மிச்சமோ
ஒரு உறவின் வாசமோ
ஒரு வரலாற்றின் வீச்சமோ
பிரசவமாகிக் கொண்டியிருக்கிறது
சிலநேரம் குறைப்பிரசவமாகவோ
கருக்கலைப்பாகவோ




எழுதியது ஈரோடு கதிர்