Author Topic: ஒரு ஈராக்கிய கவிஞனின் சாமத்துக் கடிதம்...!!!  (Read 2008 times)

Offline Yousuf

தோழா

எங்கள் வாழ்க்கை

ஒரு மாதிரியானதென்பதை

நீ நம்புவாயா ............?

குண்டுவீசும் விமானங்களை

உணவு தரும் விமானமென

பராக்குப் பார்க்கும்

குழந்தை போலவே

நம்பி ஏமாந்து கிடக்கிறோம்

உலக நாடுகளை.

வியர்க்கும் போது

விசிறி விடுகிறது

சீறி வருகின்ற ஏவுகணைகள் ....!

பல்லாங்குளியாட

புல்லட்டுகளும்.

ஓழித்து விளையாடிட

குண்டு வெடிப்புப் பள்ளங்களுமாக

பொழுது கழிகிறது.

வளவுக்கு ஒரு கிணறை

இலவசமாக

தோண்டித் தருகின்றன அமெரிக்க

விமானங்கள்.

உங்களுக்குச் சேதி சொல்லி

அனுப்ப

ஒட்டகங்களைத்தவிர

வேறு நாதியில்லை

இந்த வாழ்வைக் காட்டிலும்

சாவு சக்கரையாகும்

என்றே

எழுதிடத் நினைக்கும் போதிலே

இது தான் கடைசிக் கவிதையோ

என

வந்து விசாரிக்கிறது

சிப்பாய்களின் பூட்ஷ் கால் ஓசை .....!!!

Offline Global Angel