Author Topic: முறிந்த கிளையின் ஒடியும் சப்தம்..!!!  (Read 2700 times)

Offline Yousuf

திருப்பித் தர வலிமையற்ற
ஒருவனின் -
கடன் கேட்கும் தொனி..
தனக்குத் தானே பாடும்
இரங்கற்பா போன்றது..!

தன் வறுமையைக் கூற..
வார்த்தையின்றி அவன்
கூனிக் குறுகி..
”குறுந்தகவல்” அனுப்பக் கூடும்..!

பார்த்து விட்டு..
பார்க்காதது போல
பாவனை செய்யும்..
உறவுகள் -
முறிந்த கிளையின்
ஒடியும் சப்தம்..
வேர் வரையும் உலுக்கக் கூடும்..!

வளர்த்தவனின் சூதை..
அறுக்கும்போது மட்டுமே
அறிய நேர்ந்த
ஆட்டுக்குட்டியின்
துயரை
குரல்வளையில் இருந்து கொப்பளிக்கும்
குருதிகள் பேசக் கூடும்..!

வாயில்லா ஜீவன்களைப் போல
வறியவர்கள்...!

இருப்பவனின் செல்வத்தில்
இல்லாதவனின் இரத்தமும்
வியர்வையும்
காய்ந்து கிடப்பதை
கண்ணீர்த் துளிகள் மட்டுமே
காணக் கூடும்..!

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 601
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
arumayana kavithai varumayin niram sivappuu :(
                    

Offline Yousuf

பாராட்டுவது பெரிதல்ல வறுமையில் வாடுவோருக்கு உதவ வேண்டும்...!!!

குறிப்பாக உறவினர்களுக்கு உதவுவது சிறப்பு...!!!


Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 601
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
                    

Offline Yousuf

நன்றி...!!! :) :) :)