முத்தமிழும் போதாது...
தேய்பிறை இல்லா முழு நிலவாய் ஜொலிக்கும் உன் முகம் சொல்ல
முத்தமிழும் போதாது...
வாடாத புது ரோஜாவாய் மிளிரும் உன் இதழ் சொல்ல
முத்தமிழும் போதாது...
வீழாத வெள்ளி நட்சத்திரமாய் மின்னும் உன் பார்வை சொல்ல
முத்தமிழும் போதாது...
கொல்லாமல் கொல்லும் ஆயுதமாய் பளிச்சிடும் உன் புன்னகை சொல்ல
முத்தமிழும் போதாது...
என் நெஞ்சமே கோவிலாய் உன் வருகைக்காய் காத்திருக்கும் பக்தை என் காதல் சொல்ல