இணையத்தின் இமயமாம்
FTC மன்றத்தின் மன்னனுக்கு
அரட்டை அறை கோபியர்கள்
கெஞ்சி கொஞ்சும் (குட்டி ) கண்ணனுக்கு
வயதில் எப்படியோ, அன்பால், பண்பால்,அரும் மதிப்பால்,
பெரும் குணத்தால் உள்ளம் கவர்ந்த அண்ணனுக்கு
பூஞ்சோலையில் காலையில் மலர்ந்து
மாலையில் வாடிடும் பூக்களையோ ?
மாலையில் மலர்ந்து காலையில் வாடிடும் பூக்களையோ ?
சண்டாய் இட்டு வாழ்த்து சொல்வதில்
உடன்பாடில்லா உன் உடன்பிறவா உடன்பிறப்பு
ஒரு வகையில் உனக்கு நன்று அறிமுகம் ஆன
ரோசா , மல்லிகை (ஜாஸ்மின் ),தாமரை , மலர்
என, உயிர் பூக்களை சண்டாய் ஆக்கி
இனிய பிறந்த நாள் நல் வாழ்த்து சொல்கிறேன் (GAB)!
பின் குறிப்பு
(வெறும் வாழ்த்துக்கு மட்டும் ),
(படித்துவிட்டு யாரும் சண்டைக்கு வரவேண்டாம் !)