எண்ணக்குதிரையை
தட்டிவிடு
வண்ணங்களாய் கனவுகளை
மனதில் வரைந்துவிடு
இலட்சியங்கள் உனக்கு
எழுச்சிகள் தரும்
அலட்சியங்கள் - நீகாட்டினால்
தொலைந்துபோகும் உன்வாழ்க்கை
சோம்பலைத் துரத்து
அதுநமக்கெதிரி
வேதனைகளின் படிப்பினைகள்
நமக்கு போதனைகளானால்
வெற்றி நமக்குறுதி
அல்லும் பகலும்
காலம் நமக்காய் விரித்திருக்கும்
சுருட்டிக் கொள்வதும்
தட்டிச்செல்வதும் நம்
கைகளில் இருக்கும்
துவண்டுகிடந்தால்
துன்பங்கள் ஓயாது
உறுதிகொண்டால் வாழ்வில்
தடைகள் இருக்காது
ஒரு நொடி துணிச்சல்
இறந்துவிடலாம்
ஒவ்வொரு நொடியும்
துணிச்சல் கொண்டால்
வாழ்வில்-நாம்
ஜெயித்துவிடலாம்