ஒரு சமயம் எப்போதும் தத்துவம் பேசும் மீன் ஒன்று சமுத்திரத்தில் சோகமாக இருந்தது. அந்த வழியில் சென்ற மற்றொரு மீன்..,
"ஏய் தத்துவவாதியே.., என்ன சோகம்..?"
"எனக்கு தொல்லை கொடுக்காதே.. நான் ஆழமான கவலையில் இருக்கிறேன்..!" என்றது தத்துவ மீன்.
"பறவாய் இல்லை.. என்னிடம் சொல்.. கவலையின் காரணத்தை..?"
"நான் செல்லும் இடங்கள் எல்லாம்.. சமுத்திரத்தை பேசுகிறார்கள்.. நானும் அதை பார்க விரும்பி எல்லா இடங்களிலும் தேடிவிட்டேன்.. ஆனால் என்னால் காணமுடியவில்லை.. அது எங்கே இருக்கிறது..?"
"அட முட்டாள் தத்துவவாதியே.., நீ என்ன சமுத்திரத்திற்கு வெளியேயா இருக்கிறாய் அதை தேடுவதற்கு..? நீ இருப்பதே சமுத்திரத்திரத்தில் தானே..!"
(தாம் செய்கிற முட்டாள் தனங்களுக்கும் ஒவ்வொன்றுக்கும், ஒவ்வொரு தத்துவங்களை வைத்தே பின்பற்றுகிறார்கள். இல்லா விட்டால் அவர்களால் அந்த முட்டாள்தனத்தை தொடர முடியாது. இப்படிதான் சிலர் கடவுளை தேடுவதும். கடவுளையே சுவாசித்துகொண்டும்.., அருந்தி கொண்டும்.., உண்டு கொண்டும்.., அதன்மீது நடந்து கொண்டும். கடவுள் எங்கே என்று தேடுகிறார்கள் சிலர்.