Author Topic: மாற வேண்டுமா கல்வி முறை?  (Read 4920 times)

Offline Yousuf

கல்வி என்பதன் சாரத்தை விளங்கிக் கொள்ளவே முடியாமல் ஓடிக்கொண்டிருக்கும் மக்களை நிறுத்தி...கற்கும் கல்வி வாழ்க்கையில் எங்கெல்லாம் பயன் தந்தது அல்லது வாழ்க்கையை எதிர்கொள்ள எப்படி எல்லாம் கல்வி உதவியது என்ற கேள்வி கேட்டால்....ஒரு கணம் ஸ்தம்பித்து மழுப்பலாய் எதேதோ பதில்கள்தான் வரும்.

ஒரு கிராமப்புற கல்லூரியில் ப்ரக்டிகள் கிளாஸையே தியரியாக திணிக்கப்பட்டுக் கொண்டு இருக்கும் ஒரு எதார்த்த உலகில் அவனின் கல்வி எப்படி அவனுக்கு உதவும்....?  கல்வி முறை பற்றிய ஒரு கண்ணோட்டத்தை.....இதோ உங்களுக்காக...!


அவர்கள் மூளையில்
விதையை போல்
தூவப்பட வேண்டிய அறிவு

ஆணியை போல்அறையப்படுகிறது...!!


என்ற வைரமுத்து கவிதையில் “ஆணி” என்பது “கடப்பாரை” என மாற்றப் பட வேண்டும். எம்முடைய ஆதங்கங்கள் இதுதான்.


நாம் குழந்தைகளுக்குத் தேவையானதை கற்றுதருகிறோமா? உண்மையிலேயே அவர்கள் அதை புரிந்துப் படிக்கிறார்களா?


குழந்தைகளை ஒரு கற்கும் மனிதர்களாக பார்க்காமல், ஒரு மனப்பாடம் செய்யும் இயந்திரமாக மாறிவிட்டார்கள். உதாரணமாக ஒரு கம்பியூட்டர் புரொகிராமை எடுத்துக் கொண்டால் எத்தனைப் பேர் அதைப் புரிந்து எழுதுகிறார்கள். ஒரு அவுட்புட்டை பல விதங்களில் கொண்டு வரலாம். செய்கிறார்களா? இல்லையே, ஒரு வகுப்பில் அனைத்து மாணவர்களின் விடையும் ஒரே மாதிரிதான் இருக்கிறது. அப்படி இருக்கவே ஆசிரியர்கள் விரும்புகிறார்கள். மாணவர்களை அவுட் ஆப் பாக்ஸ் யோசிக்கவிடுவதில்லை.


பள்ளிகள்:

மாரல் சயின்ஸ், ஸ்போர்ட்ஸ், கிராமர் கிளாஸ் போன்றவை தேவையில்லை என்று நினைக்கிறார்கள். அவர்கள் குறிக்கோள் பரிட்சை ரிசல்ட் மட்டுமே, நியூஸ் பேப்பரில் தங்கள் பள்ளி 100% தேர்ச்சி என விளம்பரப்படுத்துவதில் தான் இருக்கிறது. கல்வி, மாணவர்கள் மீது திணிக்கப்படுகிறது என்று தான் சொல்லவேண்டும்.


ஆசிரியர்கள்:

ஆசிரியர்கள் தங்கள் கடமைக்காக கற்று கொடுப்பதாக நினைப்பதை விடுத்து ஒரு எதிர்கால தூணை செதுக்குவதாக நினைக்க வேண்டும். ஆனால், பாவம் ஆசிரியர்கள் என்ன செய்வார்கள். பல தனியார் பள்ளிகளில் குறைந்த சம்பளத்திற்குக் கத்துக்குட்டிகளை வேலைக்கு எடுக்கிறார்கள். அவர்களும் பெரியதாய் எதுவும் நடத்த விரும்பிவது இல்லை. அரசாங்க ஆசிரியர்களை சொல்லவே வேண்டாம், சில நல்லாசிரியர்களை தவிர பிறர் வீட்டில் டியூஷன் எடுத்து சம்பாதிக்கிறார்கள். பள்ளியை மறந்து விடுகிறார்கள். மொரிசியஸில் எந்த பள்ளிக்கு ஆசிரியராக செல்ல வேண்டுமானாலும் அரசாங்க லைசன்ஸ் பெற வேண்டும். தகுதி உள்ளவர்கள் மட்டுமே பெற்று போதிக்க முடியும்.


பெற்றோர்:

மற்றவர்களை குறை சொல்வதை விட நம்மை பற்றி யோசிப்போம். எத்தனை பேர் தன் பிள்ளைகளுடன் அமர்ந்து பாடம் சொல்லி கொடுக்கிறோம்? எத்தனை முறை பள்ளிக்கு சென்று அவர்கள் எப்படி படிக்கிறார்கள் என கேட்டு இருக்கிறோம்? பிள்ளைகளை சொந்தமாக பதில் எழுத சொன்னது உண்டா? புத்தகங்களை படிக்க சொன்னது உண்டா? உடன் அமர்ந்து படித்தது உண்டா? பிள்ளைகளுடன் பள்ளி, பாடம், நண்பர்கள் பற்றி பேசியது உண்டா? நேரம் இல்லை என்று சொல்வது தவறு, நம் பிள்ளைக்கு நாம் நேரம் ஒதுக்காமல் யார் ஒதுக்குவார்கள்.


அரசாங்கம்:

நம் நாட்டில்தான் CBSE, Matric, State என கல்வியிலும் பிரிவுகளை வைத்து உள்ளோம். ஏன் இந்த நிலை? நல்ல Backgroundல் இருந்து வரும் பையன் CBSE படிப்பதும், கிராமத்து மாணவன் State Board ல் படிப்பது ஏன்? State board ல் 8 வது வகுப்பில் படிப்பதை CBSE ல் 3 வதிலேயே கற்றுகொடுக்கிறார்கள். Right for Education இப்பதான் கொண்டுவந்துருக்காங்க, இதுக்கு மேல ஒவ்வொன்றாக மாற்றவேண்டும்.

நல்ல கல்வி பெற வேண்டும் என்பதற்காக CBSE யில் அனைவராலும் சேர்க்கமுடியாது. செலவும் அதிகம், சேர்த்துக்கொள்ள அவர்கள் போடும் ரூல்ஸும் கொடுமை. LKG சேர்க்க குழந்தைக்கு இண்டர்வியு, வீடு 2 கிலோமீட்டருக்குள்ள இருக்கணும், அட்ரஸ் புரூப் கொடுக்கனும், 4 மணிக்கு க்யூல நின்னு அப்ளிகேஷன் வாங்கனும், இப்படி பல. அது இல்லாம, சேர்த்த பிறகு LKG குழந்தைக்கு டிசிப்பிளின் இருக்கனுமாம், சொன்ன பேச்சை கேட்கலைனா வீட்டுக்கு ஆஜர் நோட்டீஸ் அனுப்புறாங்கலாம்

12வது படித்து வெளியில்வரும் மாணவன், அவனுக்கு வயசு 18. ரயில் டிக்கெட் புக் செய்ய தெரியாது, பாங்க செலான் எழுத தெரியாது. ஆனா, ஓட்டு மட்டும் போடலாம். அரசியல் மட்டும் அவனுக்கு என்ன தெரியும்.

என்ன நடக்கிறது நம்ம நாட்டில்? கண்டிப்பாய் கல்விமுறை மாறவேண்டும்.