அபாரமான யோசனை ! அற்புதமான யோசனை !
ஒரு வார்த்தையினை பொது அகராதியில்
இருந்து நீக்குவது எத்தனை சாத்தியமோ ??
சத்தியமாய் எனக்கு தெரியாது .இருந்தும்,
குறைந்தது என் அகராதியில் இருந்து
பிரிவு எனும் ஒரு வார்த்தையை மட்டுமாவது
தூக்கிலிட்டு தூக்கிவிடுவது என தீர்மானித்தே விட்டேன் .
தூயவளே உன் யோசனைக்கு பின் .