உன் அறிமுகத்தின் பொழுது தான்
புனிதம் எனும் வார்த்தையே
அறிமுகம் ஆனது எனக்கு !
உன் பழக்கத்திற்கு பிறகுதான்
புனிதம் எனும் வார்த்தையும் பழக்கம்
பெரும் அளவில் பிரிவென்பதே
அறியாது இருந்த நமக்கு
எதிர்பாராவிதமாய் ஒரு பெரும் பிரிவு .
உன் பிரிவின் துவக்கத்தில் ஏதும்
பெரும் சலனம் இல்லை என் மனதில்
ஒரு நாள் கழிந்த பின்தான் உள்ளே
மனதில் எடை அதிகரிப்பதை உணர்ந்தேன்.
ஒன்று,இரண்டு என நான்கு நாட்கள்
கழிந்திட்ட பிறகு உன் நினைவின்
நிழலிலேயே இருந்ததன் பயனால்
புனிதம் அதன் பூரண பொருள் புரிந்தேன் !
புனிதமானவளே !
உன் புனிதம் பூரணமாய் புரிந்துகொண்டேன்
போதுமடி போதும் !
இனி இப்படி ஒரு பிரிவு நேராமல் பார்த்துக்கொள் !
அது போதும் எனக்கு !