Author Topic: வெட்க புன்னகை !  (Read 770 times)

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
வெட்க புன்னகை !
« on: May 30, 2012, 10:59:19 AM »

உதகையில் மலர்கண்காட்சியில்
மலர்களின் வனப்பினை காண
மனம்நிறைந்த ஆசையுடன் சென்றிருந்தேன் .
ஓர்  இடத்தினில் மங்கையவள்
தன் தங்கையுடன்,  தன் அழகோடு
மலரின் அழகை ஒப்பிட்டு கொண்டிருந்தால்
புகைப்படம் எடுத்தபடி ,
ஒரு இக்கட்டான கட்டத்தில்
அவள் சேலை தலைப்பு கொண்டு மலர்களை
மூடி மறைத்திருந்தாள்,எதேச்சையோ
திட்டமிட்டோ தெரியவில்லை ??
சைகையால் அவரை அழைத்தேன்
அவர் கவனம் என்னை அடைய
உங்கள் சேலை, மலர்களை
மூடி மறைகின்றது  என்றேன்
விருட்டென்று இடத்தைவிட்டு விலகிவிட்டாள்.
உதகையின் மொத்த மலர்களும் வெட்கப்படும்படி
ஒரு புன்னகையை உதிர்த்து விட்டு .......