ஓட்ஸ் உப்புமா
ஒட்ஸ் - 200 கிராம்
பெரிய வெங்காயம் - ஒன்று
பெரியதக்காளி - ஒன்று
பச்சை மிளகாய் - ஒன்று
உப்பு - தேவைகேற்ப
கடுகு, உளுந்து - சிறிதளவு
எண்ணெய் - 2 தேக்கரண்டி
தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்
ஓட்ஸினை வெறும் வாணலியில் 4 நிமிடங்கள் வதக்கி தனியாக வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, பச்சை மிளகாய் சேர்த்து தாளிக்கவும்.
அதில் தக்காளி, வெங்காயம் சேர்த்து வதக்கவும். தக்காளி வெங்காயம் வதங்கியதும் அதில் ஓட்ஸ், உப்பு, தண்ணீர் சேர்க்கவும்.
தண்ணீர் வற்றும் வரை நன்கு கிளறவும்
வெந்ததும் இறக்கவும். எளிதில் செய்யக்கூடிய சுவையான ஓட்ஸ் உப்புமா தயார்.