Author Topic: என் உயிரை விட மேலானது.!!!!  (Read 704 times)

!! AnbaY !!

  • Guest
என் உயிரின் ஒவ்வொரு துளியில்
கண்ணீராய் வாழும் என் உயிரே
 
ஏன் என்னை வெறுக்குறாய்
நான் மௌனமாய் திரும்பி அழுகிறேன்
எனக்கு வேறொன்றும் செய்வதற்கில்லை
 
என்னை நீ எப்படி வேண்டுமானாலும்
வெறுத்துக்கொள்
ஆனால் என் இதயம் தொடும்
தூரத்திலேயே இரு
 
எனக்குள் உன் அன்பை
ஆழமாக புதைத்தவள் நீதானே
 
நெஞ்சில் எனக்கான அத்தனை
அன்பையும் வைத்துக்கொண்டு
வெறுப்பதாய் ஏன் உதடுகளால் நடிக்கிறாய்
 
உன் மீதான என் அன்பு என்பது
என் உயிரை விட மேலானது
என்பது உனக்கு தெரியாதா?