Author Topic: உன் நினைவுகள் என்னில்..!!!  (Read 715 times)

!! AnbaY !!

  • Guest
உன்னை பிரிந்தால்
உயிர் பிரியும் நிலையில்
நானிருப்பேன் என்று தெரிந்தும்
நீ பிரிந்து சென்று விட்டாய்
 
நாளை சரியாகிவிடும்
என்று எண்ணியே தினமும்
என் இரவை சந்திக்கிறேன்
 
எல்லாம் முடிந்துவிட்டது என்பதை
ஏன் தான் ஏற்க மறுக்கிறது
என் அறியா மனம்
 
எவ்வளவோ முயன்றும்
தூக்கம் தொலைகிறேன்
உன் நினைவுகளில்
 
நான் பேசிய வார்த்தைகள்
உன்னில்
அழிந்து போகலாம்
 
நாம் பழகிய நாட்கள்
உன்னில்
இறந்து போகலாம்
 
உன் சத்தியங்கள்
உன்னில்
மறைந்து போகலாம்
 
இந்த உலகமே
உன்னைப் போல்
உருமாறிப் போனாலும்
 
உன் நினைவுகள் என்னில்
என்றும் உயிர் வாழ்ந்து
கொண்டேயிருக்கும்