கால இயந்திரக் கோளாறு
சீதையும் கண்ணகியும் சந்தித்துக் கொண்டார்கள்.
சீதை வருத்தப்பட்டாள்,
சிதையில் தான் இறங்கியதற்குப் பதிலாக
ராமனைத் தள்ளியிருந்தால்
சீதாயணம் எழுதியிருப்பார்களென்று.
கண்ணகி சமாதானம் சொன்னாள்.
அந்த பாவத்திற்குத்தான்
அவன் கோவிலை இடித்துவிட்டார்களேயென்று.
சீதை அறிவுறுத்தினாள்.
அந்த பயலை கல்லால் அடித்தாவது
வீட்டிற்கு இழுத்து வா.
சிலம்பை மட்டும் கழட்டிக் கொடுக்காதே.
கையாலாகாத்தனத்தையெல்லாம்
காவியமாக்கி உன்னை தெய்வமாக்கி
கோவிலும் கட்டி விடுவார்கள்.
அவன் தீக்குளித்த பிறகு ஏற்றுக்கொள்.
கண்ணகிக்கென்னவோ கோவலனை
தீக்குளிக்கச் சொல்வதை.விட
எலிசா டெஸ்ட் எடுக்கச் சொல்வதே மேலெனப்பட்டது.