நீ ரோஜாவாக இருந்தால் நான் முட்களாக இருப்பேன்
உன்னை தொடுவதற்காக அல்ல
உன்னை யாரும் தொடாமல் இருப்பதற்காக!!!
*****************************************************************
பூக்களுக்கு மட்டும் பேச தெரிந்தால் -சொல்லிவிடும்
இதயமற்ற பெண்ணின் இதயத்திற்கு
என்னை பரிசளிக்கதே என்று !!!
*****************************************************************
ஒருமுறை சந்தித்தேன்
பலமுறை சிந்திக்க வைத்தாய்
இப்பொழுது பலமுறை சிந்திக்கிறேன்
ஒருமுறையாவது சந்திப்போமா என்று !!!
****************************************************************
உன்னை பார்க்கும்போது
புன்னகை செய்யும் என் இதழ்களைவிட
உன்னை காணாதபோது கண்ணிர்] விடும்
என் கண்களையே நேசிக்கிறேன் !!!
***************************************************************
பள்ளி எனும் சோலைக்குள் புகுந்தேன்
கல்வி எனும் தேனை பருக நினைத்தேன்
கல்வி எனும் தேனை பருகுவதற்குள்
நட்பு எனும் தேனை பருகினேன்
நட்பு எனும் தேனை பருகுவதற்குள்
பிரிவு எனும் முள் குத்திவிட்டது
இது நிரந்தரமா!!!
*************************************************************
நீ வருவாய் என காத்திருந்தேன் -ஆனால்
நீ வரவில்லை ,அப்பொழுதுதான்
தெரிந்தது நான் காத்திருந்த இடம்
"கல்லறை" என்று !!!
************************************************************
துடிப்பதை விட உன்னை நினைப்பதிலேயே
ஆர்வமாய் இருக்கிறது
என் இதயம் !!!
************************************************************
எப்படித்தான் எதிர்கொள்வது
பலகோடி வார்த்தைகள் கொண்ட
உன் மௌனத்தை !!!
************************************************************
தங்கத்தில் வெள்ளி கலப்படம்
என்னவள் காலில் கொலுசு !!!
************************************************************
@மெழுகுவர்த்தி@
மற்றவர்களுக்கு வெளிச்சம் தந்துவிட்டு
நீ ஏன் அழுகிறாய் !!!
***********************************************************
@பட்டாம்பூச்சி@
கடவுள் எவ்வளவு அழகாக படைத்தான்
என்னை !
நான் இறந்து விடுவேன் என்று
தெரிந்தும்!!!
*********************************************************
நீ என்னை பார்க்க வேண்டும் என்பதற்காக
கடவுள் வேடம் அணிந்து நின்றேன் கோவிலில்
அப்பொழுதும் கண்களை மூடியே
தரிசித்துவிட்டு செல்கிறாயே பெண்ணே !!!
*********************************************************