Copy rights issue contents will be removed without any notifications/warnings!!.
எங்கே சென்றாய் எனை விடுத்து ??சீராக இல்லாவிட்டாலும் சரியாகத்தானே பேசி வந்தோம் ??இருந்தும் , திடீர் என்று எங்கே சென்றாய் எனை விடுத்து ??யாரேனும் ,ஏதேனும் சொன்னார்களோ ?நீயாக ஏதேனும் நினைத்துகொண்டாயா ?குழப்பத்தில் சிக்குண்டு இருக்கின்றாய் என நான் நானாகத்தான் உன்னோடு பேசாதிருந்தேன்.குழப்பம் தெளிந்து மீண்டு வருவாய் மீண்டும் என் மீண்டும் மீண்டும் காத்திருந்தேன் எங்கே சென்றாய் எனை விடுத்து ??அங்கொன்றும் இங்கொன்றுமாய் அடிக்கோடிட்டு வந்துகொண்டுதான் இருந்தது உன் பதிப்பு பதிப்பை படித்தபின் தன் உணர்ந்தேன் இன்னும் உயிராடுதான் இருக்கிறது என் மதிப்பு.பொன் மனமாம் உன் மனம் அது புண்ணானதோ??பொன்னானவளே! புண்ணாகும்படி என்னானதோ ?? என்ன ஆகியிருந்தாலும் என்னிடம் பகிர்ந்திருக்கலாம்??என்னால் ஏதும் தீர்வு ஆகாவிட்டாலும் பகிர்ந்துகொள்ளும் துன்பம் பாதிஆகுமாமே ??அதற்காகவாவது என்னிடம் பகிர்ந்திருக்கலாம் ?பகிர்தலில் உடன்பாடில்லை என பகர்ந்திருக்கலாம் ?இப்படி, ஏதும் சொல்லாமல் நகர்ந்தது நியாயமா ?