Author Topic: மைதா பிஸ்கட்  (Read 1341 times)

Offline kanmani

மைதா பிஸ்கட்
« on: May 23, 2012, 09:44:08 AM »
   மைதா பிஸ்கட்

    மைதா - கால் கிலோ
    சர்க்கரை - 150 கிராம்
    டால்டா - ஒரு தேக்கரண்டி
    முட்டை - ஒன்று
    பொரித்தெடுக்க:
    எண்ணெய்

ஒரு பாத்திரத்தில் அனைத்து பொருட்களையும் ஒன்றாக சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசையவும்.

பிசைந்த மாவினை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.

பின்னர் உருட்டிய உருண்டைகளை ஒவ்வொன்றாக வைத்து சப்பாத்தி கல்லில் வட்ட வடிவத்தில் திரட்டவும். திரட்டிய பின் நமக்கு ஏற்ற வடிவத்தில் வெட்டிக் கொள்ளவும்.

அடுப்பில் ஒரு கடாயில் எண்ணெய் வைக்கவும். எண்ணெய் நன்கு சூடான பின் வடிவமைத்த பிஸ்கெட்டை அதில் போட்டு பொரிக்கவும்.

சுவையான மைதா பிஸ்கட் ரெடி.