Author Topic: சிறு பிள்ளைபோல ஏன் விழிப்பேன் ??  (Read 928 times)

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
நவரசங்களை அடிப்படையாய் கொண்டு
நற்பதிப்பாய் படைத்தும் பதித்தும்
நல்லவளே உன் மாதிரிகளை எடுத்து
நால்நூறு நபர்களின் மாதிரிகளோடு ,இணைத்து
நன்றாய் அடைக்கப்பட்ட அட்டையில் இட்டு
நற்குழப்பம் விளைவிக்க நன்றாய் குலுக்கி
நல்லபடியாய் கண்டுபிடி கொட்டிகிடக்கும் பல
நற்பதிப்புகளில் என் பதிப்பு எதுவென்று
நடுநிசியில் எனை  எழுப்பி கேட்டாலும்
நச்சென்று நெற்றி பொட்டில் அடித்தாற்போல
நல்லவளே, உன் பதிப்பினை
நான் அறிந்திடுவேன், புரிந்திடுவேன்
நான் ஏன் சிறு பிள்ளைபோல  விழிப்பேன் ??