Author Topic: என் இமை பொழுதில்...  (Read 2316 times)

Offline JS

என் இமை பொழுதில்...
« on: July 30, 2011, 03:08:51 PM »
என் இமை பொழுதில் வந்து
  ஒளி வீசிய பேரழகே !
என் நொடி பொழுதை
  உன் வசம் ஆக்கினாய் !...

நீ இடும் 'மை'யில்
  என்ன வசியம் செய்தாயடி !
உன் நிழலை கூட தொடர
  என்னை தூண்டுதடி !...

மயக்கத்திற்கு விலை போனேன்
  உன் அழகை காண முடியாமல் !
மீண்டு வர முயற்சிக்கிறேன்
  உன்னை பிரிய முடியாமல் !...

வெட்கத்திற்கு தாழ்ப்பாள் போட்டு
  கொஞ்சம் என்னை பாரடி !
சேதி சொல்ல வந்த என்னை
  சேர்த்து கொண்டு செல்லடி !...

சீவி விட்ட கொம்பை போல்
  உன் இமைகள் காட்சி தர
சாகாவரம் கேட்டேன்
  உன் கண்களில் நிலைத்து வாழ !!...
JS
நம்பிக்கையே வாழ்வின் அடிப்படை

Offline Global Angel

Re: என் இமை பொழுதில்...
« Reply #1 on: July 30, 2011, 04:23:53 PM »
சீவி விட்ட கொம்பை போல்
  உன் இமைகள் காட்சி தர
சாகாவரம் கேட்டேன்
  உன் கண்களில் நிலைத்து வாழ !!...

nicekavithai.. ;)