« on: May 17, 2012, 09:39:17 AM »
இரவின் மடியில் ...
மெய் மறந்து..
மனம் மறந்து....
சுகாமாய் ஒரு உறக்கம்...
பல நாள் நாடினேன்..
என்றும் உறக்கத்தை தொலைத்தவளாய் நான்..
அந்த தேடலின் இடையிலும்..
இனிமையாய் உன் நினைவு..
மனதிற்கு என்றும் இதமே..
விழியோரம் வரும் ..
கண்ணீர் துளி கூட ...
வர மறுக்கிறதே,,,
அதன் வரவு ...
நீ விரும்பாதது என்னும் ...
ஒரே காரணத்தால்....
இதன் காரணம் தான் காதலா ...
இன்னல்கள்...தொல்லைகள்...
வருத்தங்கள்..வேதனைகள்...
அனைத்தையும் தோற்கடிக்கும்...
உன் நேசத்தின் வீரியம் ...
என்றும் அதிசயமே....
« Last Edit: May 17, 2012, 10:37:56 AM by supernatural »

Logged