Author Topic: :கருணைக்கிழங்கு மசியல்  (Read 2500 times)

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 45
  • Total likes: 45
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
கிழங்கு வகைகளிலே உருளைக்கிழங்கை தான் நாம் வெரைட்டி வெரைட்டியாக செய்து சாப்பிடுவோம். கருணைக்கிழங்கிலும் சாம்பார், புளிக்குழம்பு, மசியல்னு நிறைய செய்யலாம். குறிப்பாக மசியல் அதீத சுவையுடன் இருக்கும். அதோடு கருணைக்கிழங்கு மருத்துவம் நிறைந்ததும்கூட. ஆமாங்க! மூலத்துக்கு இது ரொம்ப நல்லது. என்னங்க...எங்க போறீங்க...மசியல் செய்யத்தானே....

தேவையான பொருட்கள்:

பழைய கருணைக்கிழங்கு - 1/2 கிலோ
தக்காளி - 2
புளி - சிறிதளவு
மஞ்சள்தூள் - 1 டீ ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1-1/2 டேபிள் ஸ்பூன்
மல்லித்தூள் - 2 டீ ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தேங்காய் துறுவல் - 4 டேபிள் ஸ்பூன்

தாளிக்க:

சின்ன வெங்காயம் - 6
பச்சை மிளகாய் - 3
எண்ணெய் - தேவையான அளவு
கடுகு, உளுந்து - தேவையான அளவு
கருவேப்பிலை - தேவையான அளவு

செய்முறை:

* கருணைக்கிழங்கை நன்கு கழுவி வேக வைத்து மசித்து வைத்துக்கொள்ளவும்.

* வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.

* வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு கடுகுஉளுந்து, கருவேப்பிலை, சி.வெங்காயம், ப.மிளகாய் சேர்த்து தாளிக்கவும்.

* தாளித்தவுடன் புளிக்கரைசலை விட்டு, அதோடு மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், தக்காளி, உப்பு சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விடவும். (புளிக்கரைசல் தண்ணியாக இல்லாமல் ஓரளவு கெட்டியாக இருக்க வேண்டும்)

* பின்பு மசித்து வைத்த கருணைக்கிழங்கை சேர்க்கவும்.

* பின்பு தேங்காய்த்துறுவல் சேர்த்து 5 நிமிடம் கழித்து இறக்கவும்.

* சுவையான கருணைக்கிழங்கு மசியல் ரெடி.

சாம்பார், பருப்பு ரசத்துக்கு மேட்சான சைட் டிஷ் இது

புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்