Author Topic: ஹோல்சம் ரைஸ்  (Read 1034 times)

Offline kanmani

ஹோல்சம் ரைஸ்
« on: May 11, 2012, 10:25:29 PM »
ஹோல்சம் ரைஸ்

    அரிசி - ஒரு கப்
    உடைத்த கோதுமை - அரை கப்
    பாசிபருப்பு - கால் கப்
    கீரை - ஒரு கப்
    பேபி பொட்டேட்டோ - 6
    வெங்காயம் - 2
    இஞ்சி - சிறிய துண்டு
    பூண்டு - 8 பல்
    கொத்தமல்லி - அரை கட்டு
    பச்சை மிளகாய்- 4
    பட்டை, கிராம்பு, மராட்டி மொக்கு, மிளகு, கலோஞ்சி, எண்ணெய் - தாளிக்க
    உப்பு - தேவையான அளவு

அரிசியையும் கோதுமையும் கழுவி ஒன்றாக ஊற வைக்க வேண்டும். பாசிப்பருப்பை தனியாக ஊற வைக்கவும். வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி வைக்கவும். இஞ்சி, பூண்டு, மல்லி, மிளகாயை ஒன்றாக சேர்த்து அரைத்து வைக்கவும். உருளையை தோல் நீக்கி முள்கரண்டியால் குத்தி உப்பு தூவி வைக்கவும். எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தாளிக்க கூறியவற்றை தாளிக்கவும்.

பிறகு வெங்காயம் சேர்த்து நிறம் மாறும் வரையில் வதக்கவும்.

பின்பு அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து பச்சை வாசம் போகும் வரையில் வதக்கவும். எப்பொழுதுமே இஞ்சி பூண்டு விழுது சேர்க்கும் போது நேராக எண்ணெயில் சேர்க்கவும். பிறகு தீயை மிதமாக வைத்து கொண்டு கிளற வேண்டும். பச்சை வாசம் போன பின்பு தான் மற்றதை சேர்க்க வேண்டும். இல்லையென்றால் பதார்த்தத்தின் சுவையே மாறுபடும்.

பின்பு உருளை மற்றும் கீரையை சேர்த்து வதக்கவும்.

இரண்டொரு நிமிடத்தில் ஊற வைத்த அரிசி மற்றும் கோதுமையை சேர்த்து வதக்கவும்.

அரிசியில் உள்ள தண்ணீர் முற்றிலும் வற்றிய பின் மூன்று கப் தண்ணீர் ஊற்றி ஊற வைத்த பாசிப்பருப்பை தண்ணீரிலிருந்து எடுத்து வடிக்கட்டி சேர்க்கவும். உப்பு சேர்த்து விட்டு வேக வைக்கவும்.

வெந்ததும் சூடாக ரைத்தாவுடன் பரிமாறவும். இதற்கு தொட்டுக்கொள்ள எதுவுமே தேவைப்படாது. சுட்ட அப்பளம் இருந்தால் பேஷ். இது கார்பஸ், ப்ரோட்டீன், ஃபைபர், வைட்டமின் சி என்று எல்லா சத்துக்களும் நிறைந்த ஒரு ரைஸ்.

நான் பருப்பு கீரை சேர்த்துள்ளேன். எந்த கீரை வேண்டுமானாலும் சேர்க்கலாம். வெந்தைய கீரை கூட நன்றாகவே இருக்கும். சிறு உருளை இல்லையென்றால் பெரிய உருளையை துண்டுகளாக்கி சேர்க்கவும். உருளையை கழுவி அரிந்து வைக்கும் போது உப்பு தூவி வைப்பதால் கருக்காமல் இருக்கும். இதில் உங்களுக்கு விருப்பமான வேற அதிகம் குழையாத காய்கறிகளும் சேர்த்துக் கொள்ளலாம். கோதுமை சேர்க்க பிடிக்கவில்லை என்றால் அதை விட்டு விடலாம். பாசிப்பருப்பு வேண்டாம் என்றால் அதற்கு பதிலாக ஊற வைத்த சோயா சேர்த்தும் செய்யலாம்.