’மஃபின்’கப் கேக்கின் வடிவிலான சுவையான காலை நேர உணவு. இதனை டீ, காபியுடன் ஸ்நாக் ஆகவும் பரிமாறலாம். இதிலும் பல வகைகள் உண்டு. பெரும்பாலும் ’மஃபின்கள்’ பழங்கள், காய்கள் மற்றும் நட்ஸ் சேர்த்து தயாரிக்கப்படுகின்றன.
மைதா/ஆல் பர்பஸ் ஃப்ளார் - 1 1/2 கப்
ஃப்ரெஷ் ப்ளூபெர்ரி - ஒரு கப்
உப்பு - அரை தேக்கரண்டி
பேக்கிங் பவுடர் - 2 தேக்கரண்டி
சர்க்கரை - 3/4 கப்
முட்டை - ஒன்று
வெஜிடபிள் ஆயில் - 1/3 கப்
தயிர் - 1/3 கப்
ஆரஞ்சு ஜெஸ்ட் (ஆரஞ்சு தோல் துருவியது) - ஒரு தேக்கரண்டி
வெனிலா எசன்ஸ் - ஒரு தேக்கரண்டி
தேவையானப் பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும். ஆல் பர்பஸ் ஃப்ளாருடன் பேக்கிங் பவுடர் மற்றும் உப்பு சேர்த்து 2 அல்லது 3 முறை சலித்துக் கொள்ளவும். ப்ளூபெர்ரியை அலசி வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் முட்டை, வெஜிடபிள் ஆயில் சேர்த்து அடித்துக் கொள்ளவும். அதனுடன் தயிர் சேர்க்கவும்.
இதனுடன் வெனிலா எசன்ஸ் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
இதனை வாயகன்ற பாத்திரத்துக்கு மாற்றி, சர்க்கரை மற்றும் ஆரஞ்சு ஜெஸ்ட் சேர்த்து கலந்து கொள்ளவும்.
இப்போது மாவை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கலக்கவும். தேவைப்பட்டால் 2 தேக்கரண்டி பால் சேர்த்துக் கொள்ளவும்.
கடைசியாக ப்ளுபெர்ரி சேர்த்து மெதுவாக கலந்து விடவும்.
இந்த கலவை மிகவும் கெட்டியாக இருக்கும்.
ஒரு மஃபின் ட்ரேயில் கப் கேக் லைனர்ஸ் வைத்து அதில் 3/4 பாகம் வரை மாவை நிரப்பவும்.
அவனை 400 டிகிரி F ல் முற்சூடு செய்து 20 முதல் 25 நிமிடங்கள் வரை பேக் செய்யவும்.
மஃபின் வெந்ததும் நன்றாக மேலெழும்பி, மேற்பகுதி கோல்டன் ப்ரவுன் கலரில் மாறியிருக்கும்.
சிறிது ஆறியதும் பரிமாறவும். சுவையான மிருதுவான ப்ளூபெர்ரி மஃபின் தயார்.
மஃபின் ட்ரேயில், கப் கேக் லைனர்ஸ் பயன்படுத்தாமல் பேக்கிங் ஸ்ப்ரே (ட்ரே முழுவதும்) அடித்து, அப்படியே மாவை நிரப்பியும் பேக் பண்ணலாம். இதில் தயிருக்கு பதிலாக ஆப்பிள் சாஸ் அல்லது சவர் க்ரீம் பயன்படுத்தலாம். பொதுவாக இவற்றுக்கு ப்ராஸ்ட்டிங் செய்வதில்லை.