Author Topic: விடியல் உன்கையில்  (Read 661 times)

Offline Anu

விடியல் உன்கையில்
« on: May 10, 2012, 01:16:38 PM »
இறவின் மடியில் சாய்ந்து கொண்டு
விடியலுக்காக காத்திருப்பதை விட
இரவின் கைபிடித்து நடைப்பயணம்-செய்த்து பார்
விடியல் உனக்காக வரவேற்பு கம்பளம்
விரித்து காத்திருக்கும்.
உழைப்பெனும் உளி கொண்டு
செத்துக்கிப்பார்-உன் மனதை
உயிருள்ள சிற்பமாய் காச்சியிளிப்பாள்
உன் வெற்றி தேவதை
வாய்ப்புகள் வாயிற்கதவை தட்டும் என
காலச்சக்கரத்தை வேடிக்கை பார்ப்பதை விட
காலச்சக்கரத்துடன் நீயும் சுழன்று பார்
வாய்ப்புகள் உன் வாசலில் வரிசையில்
நிற்க வாய்ப்பு கேட்கும்
கற்கள் கால்களை பதம் பார்த்தாலும்
நதிகள் தன் ஓட்டத்தை நிறுத்துவதில்லை
கடலில் கலக்கும் வரை
மனிதா
நீயும் கடிவாளாம் கட்டிய குதிரையாய்-ஓடிப்பார்
உன் இலச்சிய பாதையில்
உன் இலக்கு உன் கையில் ஜொலிக்கும்
நிலக்கரி பிரித்த வைரமாய்.


Offline suthar

  • Hero Member
  • *
  • Posts: 630
  • Total likes: 52
  • Total likes: 52
  • Karma: +0/-0
  • Gender: Male
  • யார் மனதையும் புண் படுத்த அல்ல பண்படுத்த
Re: விடியல் உன்கையில்
« Reply #1 on: May 11, 2012, 11:56:07 PM »
nice lines anu...........super ah ezhuthrenga elarum....

ஏற்புடையதை
ஏற்றுக்கொள்வேன்
அன்புடன்
- சுந்தரசுதர்சன்

Offline Yousuf

Re: விடியல் உன்கையில்
« Reply #2 on: May 12, 2012, 04:39:00 PM »
Quote
மனிதா
நீயும் கடிவாளாம் கட்டிய குதிரையாய்-ஓடிப்பார்
உன் இலச்சிய பாதையில்
உன் இலக்கு உன் கையில் ஜொலிக்கும்
நிலக்கரி பிரித்த வைரமாய்.

நல்ல கவிதை அணு அக்கா! எனக்கு மிகவும் பிடித்த வரிகள்!