Author Topic: ஏமாந்தது போதுமடா! அறங்கையும் புறங்கையும் நக்காதே!!  (Read 781 times)

Offline Yousuf

படித்ததில் பிடித்தது!

அறங்கையும் புறங்கையும் நக்காதே!
கையூட்டாம் இலஞ்சப் பணத்தை வாங்கிக் கிட்டு!
வாழும் ஈனப்பொழப்ப நடத்தும் ஈனர்களே!
இந்த ஈனப்பொழப்பிற்கு சாவதே மேலடா!!

அமர்ந்துகொண்டு கேட்கின்ற
அதிகார பிச்சையே லஞ்சமடா
அன்னத்திற்கு பிச்சையென்றாலே-வறுமைக்காக
அதைக்கூட மன்னிக்கலாம்
ஆடம்பரத்திற்க்காகவே
லஞ்ச பிச்சைதனையே தண்டிக்காமல் விடலாமா?

அழுக்கைத் துடைத்து மடியில வெச்சாலும்
புழுக்கைக் குணம் மாறாதுடா!
வஞ்சகரை அழைத்து சிம்மாசனம் தந்தாலும்-அவரின்
வஞ்சமனம் மாறாதுடா!
கயவரை கூப்பிட்டு தோழமை ஆக்கினாலும்-அவரின்
கயமைகுணம் மாறாதுடா!

சாரத்தை விட்டுவிட்டோம் - நாம
சக்கையைப் பிடித்துகொண்டோம் -வாழுகின்ற
சமுதாயத்துல மூட நம்பிக்கையில நாம போற பாதையில
எத்தனை கலகமடா?எத்தனை போராட்டமடா?
நாம என்னசெய்கின்றோம்? நாமே எங்கே போகின்றோம்?
நல்லவழி போகாமலே நாச வழி போகுறமே!

ஒருமரத்துப் பட்டையே ஒரு மரத்திலே ஒட்டுமாடா?-வாழ்வில்
ஒட்டுறது தானே ஒட்டுமடா
ஒட்டாதது ஒட்டாமல் போகுமடா-உலகினிலே
ஒட்டாமலே தனித்திருந்து ஜெயித்ததாக சரித்திரமில்லையடா!
ஒட்டாமலே மனித உயிரும் ஜனித்ததாக நடந்ததுமில்லையடா!

உலகமே உலகமே விசித்திரமடா!-அதில் வாழும்
உள்ளங்கள் எல்லாம் விந்தையடா!

ஒருத்தர் நினைத்தை ஒருத்தர் நினைப்பதில்லை!
ஒருத்தர் கனவினை ஒருத்தர் காண்பதில்லை!
ஒருத்தர் போனவழி ஒருத்தர் போகிறதில்லை!
ஒவ்வொரு வருக்கும் ஒவ்வொரு வழியாகும்
ஒருவர் மனதினில் ஓராயிரம் எண்ண்ங்கள்!

ஒவ்வொரு மனிதருள்ளும் கோடிகோடி எண்ணங்கள்!
எண்ண எண்ண அதிசயமடா! -அதில் ஒளிந்திருக்கும்
எத்தனை எத்தனை ரகசியமடா!

ஒரு ஊருக்கு ஒரு ஊருக்கு ஒரு வழியா?
ஒரு ஊருக்கு ஒரு ஊருக்கு பலவழியே!
ஒருகதவு அடைத்துவிட்டால் மறுகதவு திறந்திடுமே!
உலகினிலே நல்வாழ்விற்கு நாம் நல்வழியில் நாம் நடந்திடவே!
எத்தனையோ வழிகளிருக்கு மக்கள்வாழ வழிபிறக்கும்!
இந்த உலகினில் நீயும் இறங்கி நடந்து பாரடா!

ஒடிந்த கோலும் ஊன்றுகோலாகுமடா!
துரும்புகள் ஒன்று சேர்ந்தாலே ஓடமாகும்டா!
ஒட்டினா ஒட்டினா தொட்டிலும் கொள்ளுமடா
ஒட்டாவிட்டாலோ கட்டிலும் கொள்ளாதடா!

தனிமரம் என்றும் தோப்பாவதில்லையடா!
தனிமையிலே இனிமையானதாய் சரித்திரமில்லையடா!
ஒன்றுபட்ட இதயங்களில் காதலன்பு மலருமடா!
ஒன்றுபட்ட மக்கள் மனிதநேயம்
வாழும் மக்கள் அரசை உருவாக்குமடா!

அழ அழச்சொல்லுறவன் பிழைக்கச் சொல்லுவானே!
சிரிக்க சிரிக்க ஏமாற்றிவன் சீரழியச் செய்திடுவானே!
ஏமாற்று உலகமடா! ஏமாறக்கூடாதடா!-இது வரையினில்
ஏமாந்தது போதுமடா! சுய நல விஷமிகளை இனங்காணடா!

ஒரு சின்ன எறும்பு
ஒரு சின்ன எறும்பு
காதினில் நுழைந்தாலே-ஒரு
யானையைக் கூட வீழ்த்திவிடுமே

கடுகு சிறுத்தாலும் காரம் போகாதே
கனமில்லாத பஞ்சு அதிகம் ஏற்றிய வண்டியும் பாரம்
அதிகமான போது அதன் அச்சாணியும் உடைந்திடுமே!-அதனாலே
சின்னதென்று எதையும் குறைவாக எடையே போடக்கூடாதே!

- தமிழ்பாலா.
« Last Edit: May 08, 2012, 07:04:09 PM by Yousuf »

Offline Anu

Very Nice Kavidhai yousuf  :)

Offline Yousuf