அம்மா
அம்மா
இன்று நீ இல்லை!!
ஆனால்,
என்னுள் நிறைந்திருக்கிறாய்!
அம்மா
என் வாழ்வில்
இந்தச் சொல்லை
பல கோடி முறை
உச்சரித்து கொண்டிருக்கிறேன் .
வெவ்வேறு உணர்வுகளில்
இன்பம், துன்பம்
எல்லா நிலைகளிலும்
உன்னை அழைக்கிறேன் .
ஒவ்வொரு அழைப்பிலும்
உன் ஜீவனின்
நிழல் பதிந்திருக்கும்..
இறைவனுக்கு எப்படி
இணையில்லையோ
உவமையில்லையோ
அப்படியே உனக்கும்!!!
என் வலிக்கு
என் சோகத்திற்கு
என் சோர்வுக்கு
என் கோவத்துக்கும்
நீதானம்மா
மருந்தாய் இருந்தாய்
என் சொந்தத்தின்
ஆதார முலவேர்
நீதானம்மா!!
நான் நிற்பதற்கும்
நிலைப்பதற்கும்
நினைப்பதற்கும்
நீதானம்மா
இறைவனிடம் மன்றாடினாய்
""சொர்க்கம்
உன் காலடியில்
ஒரு தாய் மடியில்
ஒரு தாய் வடிவில்
என்பதை ஒப்புக்கொள்கிறேன்!!
உன் உயிரிலிருந்து
ஒற்றி
எனக்கு உயிர்கொடுத்த
மூல உயிர் நீதானம்மா!!!
அம்மா!!!
இன்று நீ இல்லை,
எல்லாம் எனக்கிருக்கிறது.
ஆனாலும்
தாயில்லா
அனாதை நான்!!!
உன்னை நினைக்கும் போதெல்லாம்
இந்த உலகம்
கடுகைப் போல்
இளைத்து விடுகிறது!
அம்மா,
நீ ஆயிரம் இமயங்களைவிட
உயர்ந்தவள்!!!
உன் பாதங்களைக்தொட்டு
நான் கண்ணீர்விட்டு
அழவேண்டும்!
உன் கால்களை
கண்ணீரால்
கழுவ வேண்டும்
அம்மா!!! அம்மா
அன்பேன்றாலே அம்மா
உன் அளவுக்கு அன்பு
காட்டினோர் யாரும் இல்லை
இனி அப்படி ஒரு அன்பை
தரவும் யாரும் இல்லை
இனி எத்தனை முறை அழுது
புரண்டாலும்
கோடி கோடி கோடியாய் வாரி
இறைத்தாலும் பணத்தை
இனி உன்னை போல்
தன்னல மற்ற ஒரு
உறவு கிடைக்காதம்மா
உன் நலத்தை மறந்து
என் நலத்தை மட்டுமே
சிந்தித்தவள்
உன் பசி மறந்து
என் பசி ஆற்றியவள்
சிறு எறும்பு என்னை
கடிக்க வந்தாலும்
சூரா சம்ஹார
செய்து விடுவாள்
தத்தி நடக்கும்
பருவத்தில் நான்
தடுக்கி விழுந்தாலோ
பதறி போய்
தரையை அடித்து விடுவாய்
நிலவான நீயே
உன் அளவுக்கு அழகில்லை
நிலவை காட்டி அன்னம் ஊட்டுவாய்
இவை அனைத்தும் இனி எனக்கு
கிடைகத்தே
நீ இருக்கும் காலம் வரை
உன் அருமை பெருமைகளை
அறியாதவளாய் நான்
அறியாத காலத்தில் உடன் இருந்தாய்
உன்னை முற்றிலுமாக அறிந்து விட்டேன்
அம்மா அம்மா
நீ மண்ணுலகில் இல்லை ....