வேஷம் போட்டவர்கள்
கோஷம் போட
கற்றுகொடுத்தார்களா !
கட்சிகொடி தூக்கியவர்கள்
எல்லாம்
கோடியை பதுக்கி
கொண்டார்களா !
இல்லை
தேசியகொடி தூக்கியவர்கள்
எல்லாம் புதைந்துவிட்டாகள்
என்ற தைரியம்தானோ !
ஊழல் நம்நாட்டில்
ஊறிப்போனது
கடமை உணர்வு எல்லாம்
கலைந்துபோனது !
கல்லுரி தூண்களில்
விவசாயி பணம் பதிந்துபோனது
விவசாயி இடத்தில்
கல்லூரி தூண்கள் எழும்பிகொண்டே
இருக்கிறது !
படிக்க போனேன்
பணம் பட்டம் கொடுத்தது
வேலை வாங்க
போனால் பட்டம்
தூங்குது
பணம் விளையாடுது !