கடவுள் தந்த வரம்
அது ஒரு குடும்பம் போன்றது !
அதன் வேர் - மனைவி
அடிமரம் - கணவன்
கிளை - குழந்தைகள்
இலை,மலர்,கனி , தர்மங்கள் .
சித்திரம் நிறைந்த இடம்
சிந்தனைக்குரிய இடம்
இயற்கை மனிதனுக்கு இரண்டு
கண்களும் இரண்டு காதுகளும்
கொடுத்திருகிறது !
ஆனால் நாக்கு மட்டும்
ஒன்றுதான்.
பேசுவதை காட்டிலும் பார்ப்பதும்.
கேட்பதும் தான் அதிகம்
இருக்க வேண்டும் என்பதே
அதன் அர்த்தம் !
மனிதனுக்கு நிகழ்காலம் தான் சொந்தம்
அதையும் அவன் இழந்துவிடுகிறான் .
காலம் : சிலர் முழுவதையும்
வீணாக்குகின்றனர் , அநேகர் !
பெரும்பாலும் வீணாக்குகின்றனர்
ஆனால் அனைவரும் சிறிதேனும்
வீனாக்காதிருபதில்லை !
சண்டைக்கு இருவர் தேவை
நீ அவ்விருவரில் ஒருவனாஈராதே !
நீ கோபம் கொள்ளும் ஒவ்வொரு
நிமிடமும் அறுபது வினாடி
மகிழ்ச்சியை இழந்து விடுகிறாய் !
கூலி வேலை செய்தவருடைய
வியர்வை நீங்குமுன் அவனுடைய
கூலியை கொடுத்துவிடுங்கள் !
கடவுள் கருணைக் கடல்
ஆனால், அதில் மொள்ள நாம்
உபயோகிக்கும் வாளிதான் மிகச்சிறியது !
எதையும் உற்றுக் கேட்பவர்கள்
புத்திசாலிதனமான பல கேள்விகளுக்கும்
பதில் அளிக்க முடியும் !
உண்மையின் முகம் அவ்வளவு அழகு தோற்றம்
அவ்வளவு கம்பீரம், அதை பார்த்தால் போதும்
நேசியாமல் இருக்க முடியாது !
கடவுள் தன்னை நிரூபிக்க ஒருநாளும்
அற்புதங்கள் காட்டுவதில்லை
அவருடைய சாதாரண ஸ்ரிஷ்டிகளே போதும் !
ஒரு போதும் துன்பமாக மாறாத
பொருள் ஒன்று உண்டு
அது தான் நாம் செய்யும் நற்செயல் !
சிக்கனம் என்பது
ஒருவிதமான வருமானமே !
ரோஜா செடியில்
முள் இருக்கிறது என்று முறைஈடாதே
முற்செடிகளிலும் மலர் உள்ளது என்று மகிழ்வாயாக!