Author Topic: உபதேசம்  (Read 1996 times)

Offline Jawa

உபதேசம்
« on: May 04, 2012, 08:55:31 AM »
பிச்சையெடுக்க வந்த
புதுப்பரதேசிக்கு
பழைய பரதேசியின்
பவ்வியமான உபதேசம்..................

முதல் தெரு முதல் வீட்டுக்கு
போய்விடாதே!
அந்த அம்மா
வேண்டாவெறுப்பா
வெறுஞ்சோறு போடும் .
விழுங்கமுடியாது!

இரண்டாம் தெரு
இரண்டாவது வீடு
கசாப்பு கடைக்காரு வீடு
தினமும் கறிச்சோறு
அத தின்னா அவஸ்த்த
அடக்கமுடியாது புஜத்த.

மூன்றாம் தெரு
மூணாவது வீடு
அது காவல்காரர் வீடு
போகாதே அந்த தெருவோடு
பறிபோயிடும் உன் திருவோடு

கடைசித்தெரு கடைசி வீடு
போய்விடாதே அந்தவீடு
அந்த அம்மா
இலவசஅரிசியில்
ஆக்கிய சோற்றை
அள்ளிப்போடும்.