சிறிய உருளைக்கிழங்கு - கால் கிலோ
சீரகம் - ஒரு தேக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
சின்ன வெங்காயம் - 15
சோம்பு - அரை தேக்கரண்டி
தனியா - ஒரு தேக்கரண்டி
புளி - சிறிய கோலி குண்டு அளவு
மிளகாய் வற்றல் - 5
கல் உப்பு - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
மேலே குறிப்பிட்டுள்ள தேவையானப் பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து எடுத்துக் கொள்ளவும். சின்ன வெங்காயத்தை தோலுரித்து இரண்டாக நறுக்கவும்.
மிக்ஸியில் மிளகாய் வற்றலை இரண்டாக கிள்ளி போட்டு அதனுடன் சீரகம், சோம்பு, உப்பு, புளி, தனியா சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி விழுதாக அரைக்கவும்.
அதனுடன் சின்ன வெங்காயத்தை போட்டு ஒன்றிரெண்டாக அரைத்துக் கொள்ளவும்.
வேக வைத்த உருளைக்கிழங்கை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு அதனுடன் அரைத்த விழுதை போட்டு பிசறி வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு பொரிந்ததும் கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
அதில் பிசறி வைத்திருக்கும் உருளைக்கிழங்கை போட்டு நன்கு பிரட்டி மேலே எண்ணெய் ஊற்றி நன்கு பிரட்டி விடவும்.
அடுப்பை மிதமான தீயில் வைத்து 15 நிமிடம் மூடி வைத்து வேக விடவும்.
பிறகு ஒன்று போல் சேர்த்து நன்கு பிரட்டி விட்டு இறக்கவும்.
சுவையான உருளைக்கிழங்கு மசாலா தயார்.