Author Topic: நீ நலம் தானே ?  (Read 642 times)

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
நீ நலம் தானே ?
« on: April 30, 2012, 05:39:16 PM »
நலம்  தானே ? நலம் தானே ?
சினம் கொண்டிருக்கும் சுவைத்தேனே ,
செந்தேனே நீ நலம் தானே ?

நீ இல்லா பொழுதுகளிலும் நான்
தேனாய் இல்லாவிட்டாலும் ஏதோ
தானாய் சில வரி பதித்தேன் 
எப்படி என்றால்
செவித்திறன் குறைந்த சிலர்
செவிதிறனே சுத்தமாய் அற்ற சில
மாற்றுதிரனாளிகள் முன்னால்
பய பக்தியுடன் ,முழு அர்ப்பணிப்புடன்
முகாரி ராகம் பாடும் பாகவதரை போல !

கேட்பார் பேச்சு கேட்டு ,உண்மைக்கும்
பொய்மைக்கும் பாகுபாடு அறியா
பேதையாய் போனதை எண்ணி வருந்தவா ?

என் வீட்டு வரி கட்டி வந்தால் அவ்வரிக்கும்
வரிவரியாய் வரியிட்டு விமர்சனம் வரையும்
ஒரு வரி தேவதையை தற்காலிகமாய்
இழந்து தவிப்பதை எண்ணி வருந்தவா?

விடை நீயே !