Author Topic: Q-Dir File Manager - பயனுள்ள கருவி  (Read 4734 times)

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 120
  • Total likes: 120
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Q-Dir File Manager - பயனுள்ள கருவி
« on: April 29, 2012, 09:12:45 PM »
நமது கணினியில் உள்ள ஒன்றுக்கு மேற்பட்ட பார்ட்டிஷன்களில் கோப்புகளை காப்பி செய்வது, மூவ் செய்வது, ஒப்பிட்டு பார்ப்பது போன்ற பல காரியங்களுக்காக நாம் வழக்கமாக உபயோகிக்கும் விண்டோஸ் Explorer ஒரே ஒரு pane மட்டுமே உள்ளதால் நம்மால் விரைவாக, துல்லியமாக கோப்புகளை கையாள இயலுவதில்லை.
இது போன்ற கோப்புகளின் மேலாண்மைக்காகவே Multi pane வசதி கொண்ட Q-Dir என்ற மென்பொருள் கருவி பல வகையிலும் பயனுள்ளதாக அமைந்துள்ளது.



ஒரே விண்டோவில் அதிக பட்சமாக நான்கு pane களை வைத்துக் கொள்ள முடியும். இதன் மூலமாக ஒரே சமயத்தில் நான்கு கோப்புறைகள் அல்லது நான்கு ட்ரைவ்களை கையாள முடியும்.



Tree View உட்பட நமக்கு தேவையான வகையில் கோப்புகளின் பட்டியலை  மாற்றியமைக்க முடியும்.



இதிலுள்ள options பகுதிக்கு சென்று, Context menu வில் புதிதாக எதாவது சேர்க்க வேண்டுமென்றால் சேர்த்துக் கொள்ளலாம். மேலும் preview வசதியையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.



இதிலுள்ள Colors டேபிற்கு சென்று குறிப்பிட்ட கோப்பு வகைகளுக்கு விருப்பமான நிறங்களை தேர்வு செய்து கொள்வதன் மூலமாக பலத்தரப் பட்ட கோப்பு வகைகளையும் எளிதாகவும், விரைவாகவும் கையாளுவதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. மேலும் பல வசதிகள் இந்த மென்பொருளில் தரப்பட்டுள்ளது பயன்படுத்திப் பாருங்கள்.

link


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்