Author Topic: இந்த உலகம் எரியும் வீடு.  (Read 5584 times)

Offline spince

இந்த உலகம் எரியும் வீடு.

செல்வந்தர் ஒருவர் குழந்தைகளுடன் குடும்பமாக ஒரு மாடமாளிகையில் வசித்து வந்தார்கள். ஒருநாள் மாளிகையில் தீப்பிடித்துவிட்டது. எல்லோரும் வெளியே ஓடி தப்பினார்கள். அப்போது, யாரோ கத்தினார்கள். "குழந்தைகள் உள்ளே..!" செல்வந்தர் தீப்பிடித்த மாளிகைக்குள் ஓடினார். அங்கே அந்தக் குழந்தைகள் ஓடிப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்குத் தீ விபத்தின் அபாயம் புரியவில்லை.

"குழந்தைளே.., சீக்கிரம் வெளியே போ..!, இல்லாவிட்டால் உயிருக்கு ஆபத்து..!" என்று கத்தினார் செல்வந்தர்.
ஆனால் அந்தக் குழந்தைகள் அவரைக் கவனிக்க வில்லை. எப்போதும் போல் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.
அவர் யோசித்தார். ஒரு வேறு யோசனை தோன்றியது,
"குழந்தைளே உங்களுக்காக நான் புதுப் பொம்மைகள் வாங்கி வைத்திருக்கிறேன்..!" என்றார்.
"அப்படியா..? எங்கே..?"
"வீட்டுக்கு வெளியே..!" என்று அவர் சொல்லி முடித்ததுதான் தாமதம். குழந்தைகள் பரபரவென்று பொம்மையைத் தேடி வெளியே ஓடிவிட்டார்கள். அதனால் குழந்தைகள் உயிர் பிழைத்தார்கள்.!

(இது புத்தர் சீடர்களுக்கு சொன்ன கதை. இந்த உலகம் எரியும் வீடு. நாம் அதில் சிக்கிக் விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகள்., நெருப்பின் அபாயத்தை அறியாதவர்கள்.. இங்கேயே இருந்துவிட்டால்..? எரிந்து சாம்பலாகிவிடுவோம். அதைத் தவிர்ப்பதற்காகதான்.., எம்மீது உள்ள அக்கறையில் பல பொம்மைக் கதைகளைச் சொல்லி வெளியே இழுக்கிறார்கள் ஞானிகள்..!

Offline Anu

Re: இந்த உலகம் எரியும் வீடு.
« Reply #1 on: May 14, 2012, 08:52:04 AM »

இந்த உலகம் எரியும் வீடு.

(இது புத்தர் சீடர்களுக்கு சொன்ன கதை. இந்த உலகம் எரியும் வீடு. நாம் அதில் சிக்கிக் விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகள்., நெருப்பின் அபாயத்தை அறியாதவர்கள்.. இங்கேயே இருந்துவிட்டால்..? எரிந்து சாம்பலாகிவிடுவோம். அதைத் தவிர்ப்பதற்காகதான்.., எம்மீது உள்ள அக்கறையில் பல பொம்மைக் கதைகளைச் சொல்லி வெளியே இழுக்கிறார்கள் ஞானிகள்..!

nice story spince .. esp. indha moral romba nalla iruku.. tnks for sharing..