Author Topic: ~ தேள் கொட்டிவிட்டதா? ~  (Read 767 times)

Online MysteRy

~ தேள் கொட்டிவிட்டதா? ~
« on: April 27, 2012, 10:25:15 PM »
தேள் கொட்டிவிட்டதா?




உடனே நாலைந்து வெங்காயங்களை எடுத்து நசுக்கிப் பிழிந்து சாறு எடுத்து, அதில் சிறிது பெருங்காயத்தை இழைத்து அல்லது அரைத்து தேள் கொட்டிய இடத்தில் பற்று போட்டு விட்டால் உடனே தேள் கடி இறங்கி விடும்.

வெங்காயத்தை பிழிந்து சாறு எடுத்து அதில் கொஞ்சம் மருதாணி இலையையும் துணி வெளுக்கும் சோப்பு ஒரு துண்டும் சேர்த்து அரைத்து, விழுதாக எடுத்து தேமல் படைமேல் பூசி வந்தாலும் சரியாகிவிடுகிறது.

எவரேனும் திடீரென்று மூர்ச்சையாகி விழுந்து விட்டால் அவசர அவசரமாக ஒரு வெங்காயத்தைக் கொண்டு வந்து, அவரை முகரச் சொல்லுங்கள். உடனே தெளிந்து விடும்.

இரவில் தூக்கம் வரவில்லையே என்று கவலை வேண்டாம். வெங்காய ரசத்துடன் சமஅளவு நீர் கலந்து குடித்துவிட்டுப் படுங்கள். ஆழ்ந்த தூக்கம் வரும். நிம்மதியாகத் தூங்கலாம்.

உடலில் ரத்தம் உறைவதால் ஏற்படும் கட்டிகளைக் கரைக்கும் தன்மையை வெங்காயம் ரத்தத்தில் பெருக்குகிறது.