மனிதனாய் வாழ் ,
உன் வாழ்க்கைக்கு
எல்லை உண்டு ,
உன் சாதனைகளுக்கு
ஏது எல்லை !
கற்றவன்,
கல்லாதவன் ,
படைத்தவன் ,
ஏழை ,
எது தகுதி வாழ்வை வாழ ,
மனம் துணிந்தவன்க்கு
வானம் கூட காலுக்கு கீழ்தான் !
எதை கற்றோம்
எதை மறந்தோம்
ஏன் இந்த குழப்பம் ,
உழைப்பை நம்பியவனுக்கு
ஒன்றும் தடையில்லை !
முயற்சி மார்கத்தில் ,
முன்னேறி நடப்பவன்,
தடைகளை தகர்த்தெறிய
தன்னபிக்கை போதாதா!
உழைப்பை நம்பு ,
உலகம் சாதகம் ,
பொதுநலத்தோடு வாழ்
சுயலத்தை சூறையாடு !
சோம்பலை முறி ,
சொர்க்கம் சொந்தம் !
போதிப்பவரை மற,
போதிக்க நினை ,
உனக்கென்று தனிவழி ,
அதில் உன்னையும் போற்ற ஆயிரம் பேர் !
சாதிக்க துணிந்தால்
சங்கடங்கள் சேரும் ,
நீதிக்கு தலைவணங்கி ,
நேர்வழியிலே போராடு !
முட்டையை உடைத்துக்கொண்டு வரும்
பறவைக்கு யார் வழிகாட்டி ,
மரத்தில் இருந்து விழுந்த விதைக்கு
முளைத்துவர யார் சொல்லி கொடுத்தார் ,
பறவையும் ,விலங்குகளும்
வகுத்த வழியில் வாழவில்லை ,
புலி என்ன புள்ளையா தின்கிறது
பசு மாமிசம் கேட்கிறதா ,
இயற்க்கை விதிகளை
விலங்குகள் கூட மதிக்கும்போது ,
உனக்கென்ன மனிதா
உழைத்து சாப்பிடு ,
ஒருவரையும் ஏமாற்றாதே !
உனக்கும் ஒரு கொள்கை வகு ,
வாழ்க்கையை ஒரு வட்டமாக்கு ,
அதற்குள்ளே ஒழுக்கமாய்
வாழுந்து பார் !
உன்னால் முடியும்
என்பதை முழுமையாக நம்பு ,
ஒரு நாள் உலகிற்கு
நிரூபித்துக்கட்டு ,
உற்றார் ஊரார்களுக்கு
முடிந்ததை செய்,
தோல்விகளால் சோர்வடையும் போது
நம்பிக்கையை ஊன்றுகோலாய் கொள் !
உறக்கத்தை ஓரம் போடு ,
உழைப்பில் நாட்டம் வை ,
எதற்கும் அஞ்சாதே ,
உனக்கென்று ஒரு விடியல்
நிச்சயம் ஒரு நாள் !
சத்தியத்தை போதனையை கொள் ,
சத்தியத்தை போதிக்கவும் செய் ,
உண்மையை மறைக்காமல் ,
உலகத்தாரை வாழ வை !
அன்பை நேசி ,
அனைவரையும் ஆதரி ,
உண்மையை போதி,
தாய் தந்தையரை போற்று !
உழைப்பவரை மதி ,
உண்மையான கூலி கொடு ,
நடுநிலையாய் வாழ் ,
நீதிக்கு கட்டுப்படு!
பணத்தை மிதி ,
நல்லோரை மதி ,
தீயோரை திருத்து ,
நல்லவனாய் வாழ் !
விதியை ஓரம் தல்
மதிக்கு வேலை கொடு ,
துரதிஷ்டம் கூட ,
அதிஷ்டமாய் மாறும் !
தொண்டனாகவே வாழ் ,
தலைவர்களை மதி ,
ஒருநாள் நீயும் ,
போற்றப்படுவாய்
ஒப்பற்ற தலைவனாக !