Copy rights issue contents will be removed without any notifications/warnings!!.
அற்ப விடயங்கள்.ஆற்றங்கரைக்கு தன் மகனை அழத்துப் போயிருந்தார் ஒருவர். அவனிடம் ஒரு பையைக் கொடுத்தார். பெரிய கற்களை காண்பித்தார் . "இந்த பையை அந்த கற்களால் நிறப்பு..!" என்றார். மகன் நிறப்பி எடுத்து வந்து.. "இதற்கு மேல் நிறப்ப முடியாது..!" என்றான். அப்பா கீழே கிடந்த கூழாங்கற்களில் சிலவற்றை எடுத்தார். அதே பையில் போட்டு குலுக்கினார். அவை கற்களுக்கு நடுவில் இருந்த இடைவெளிகளில் உள்ளே இறங்கின. ஒரு கட்டத்தில் மேற்கொண்டு கூழாங்கற்களைப் போட இடம் இல்லாது போனது."இப்போதாவது நிறம்பிவிட்டதாக ஒப்பு கொள்வீர்களா..?" கேட்டான் மகன். தந்தை அங்கிருந்த மணலை அள்ளி பையில் போட்டார். பையை மேலும் குலுக்கினார். கற்கள், குழாங்கற்கள் இவற்றுக்கிடையில் இருந்த இடைவெளியிகளில் மணல் இறங்கியது. "இதே பையை மணலால் நிறப்பி இருந்தால் பெரிய கற்களுக்கு இடம் இருந்திருக்குமா..?" "இருந்திருக்காது.." என்று ஒப்புக்கொண்டான் மகன்."வாழ்வை மேம்படுத்தக் கூடிய அன்பு, கருணை, உடல்ஆரோக்கியம், மனநலம் போன்ற உன்னதமான விஷயங்கள் பெரிய கற்களை போன்றவை.. தொழில், இல்லம், செல்வம் போன்றவை கூழாங்கற்களுக்கு சமனானவை.. கேளிக்கை, நகைசுவை, வீண் அரட்டை போன்ற அற்ப விஷயங்கள் இந்த மணல் போன்றவை..!" என்றார் தந்தை.(செல்வமும் கேளிக்கைகளும் தேவை இல்லை என்று நான் சொல்ல வரவில்லை, அவை தேவைதான். ஆனால் அவையே வாழ்கையையே ஒருபோதும் பூர்த்தி செய்து விடாது என்கிறேன். எதையோ எட்டி பிடிக்க வேணுமென்று வேகமாய் ஒடுகிறார்கள். வாழ்கையில் அனுபவிக்க வேண்டிய அன்பு கருணை பக்தி எல்லாம் தொலைத்து விட்டு. முதலில் பெரிய விடயங்களுக்கு வாழ்க்கையில் இடம் கொடுங்கள். அதன் பின்னும் சின்ன சின்ன விஷயங்களுக்கு இடம் இருக்கும். உங்கள் சக்தியை அற்பமான விஷயங்களுக்கு செலவழித்தால் முக்கியமான விடயங்களுக்கு இடம் இருக்காது.!
Thank u so much anu ma epdi irukinga neenga..!? miss u