Author Topic: தியானமே எல்லையற்ற விடுதலை.  (Read 5691 times)

Offline spince

  • Full Member
  • *
  • Posts: 211
  • Total likes: 1
  • Karma: +0/-0
  • Gender: Male
  • Imagine every day to be the last of a life surroun


தியானமே எல்லையற்ற விடுதலை.

ஒரு கம்பளிப்பூச்சி மற்ற கம்பளிப்பூச்சிகளைப் போலவே உண்ணவும் உறங்கவும் மட்டுமே தான் உதித்ததாக அது எண்ணிக் கொண்டிருந்தது. ஆனாலும் அது மகிழ்ச்சியின்றி இருந்தது. தன் வாழ்க்கையில், இன்னமும் தான் உணராத ஒரு பரிமாணம் இருப்பதை அது எப்படியோ பிறகு உணர்ந்து கொண்டது.

ஒரு நாள், ஒரு விநோதமான ஏக்கத்தில், அசைவற்றும் அமைதியாகவும் இருக்க அது முடிவெடுத்தது. ஒரு மரத்தின் கிளையில் தொங்கிய அது, தன்னைச்சுற்றி ஒரு கூட்டை கட்டிக் கொண்டது. வசதியின்றி இருந்தபோதும், அந்தக்கூட்டுக்குள், விழிப்புணர்வுடன் காத்திருந்தது. அதனுடைய பொறுமை கடைசியில் பலன் கொடுத்தது. ஒரு நாள் அந்தக் கூடு வெடித்து அழகான, கண்ணைப் பறிக்கும், இறக்கைகளுடன் வெளிவந்து வானத்தை வட்டமிட்டது. இப்போது அது வெறுமனே புழுவாக இருப்பதிலிருந்து விடுதலை அடைந்து சுதந்திரமாகவும் எல்லையற்றதாகவும், அழகானதாகவும் ஆகி விட்டது.

(ஒரு முறை மாற்றம் நிகழ்ந்தபிறகு, அந்த வண்ணத்துப்பூச்சி, மீண்டும் புழுவாக மாறவே முடியாது. அது, கூட்டுக்குள் இருந்தபோது, தன் உள்நிலையுடன் ஒன்றிணைந்து இருந்தது.
அதுவே, அது, தன் இறுதி இயல்பை அடையக் காரணமாக இருந்தது. அந்தக் கூட்டுக்குள் அதற்கு என்ன நிகழ்ந்ததோ அதை தியானமாக சித்தரிக்க முடியும். எல்லையற்றதாக மாற, எப்போதும், தியானம் ஒரு வழியாக இருக்கிறது