
கொய்யா பழத்தை நம்மில் பலரும் ஏளமானகதான் பார்ப்போம். கொய்யா பழத்தை சாப்பிடுவது கூட மரியாதை குறைவானது என்றும் நினைப்பவர்கள் இருக்கிறார்கள். கொய்யாவில் பல விதமான பயனுள்ள சத்துக்கள் உள்ளன.
நெல்லிக்கு அடுத்து கொய்யாவில் அதிக அளவு விட்டமின் சி உள்ளது. கொய்யா தற்சமயம் எல்லா காலங்களிலும் கிடைக்கிறது. வெள்ளைக் கொய்யா, சிவப்புக் கொய்யா என இருவகை உள்ளது. குறைந்த விலைய...ில் அதிகச் சத்துக்கள் பெற கொய்யாச் சாறு தினமும் அருந்தலாம். இனிப்பும், அமிலச் சத்துகளும் கலந்த ருசியான பழம். குளிர்ச்சி மிகுந்தது.
கொய்யாப்பழத்தில் உள்ள சத்துக்கள்:
1. நீர்=76%
2. மாவுப்பொருள்=15%
3. புரதம்=1.5%
4. கொழுப்பு=0.2%
5. கால்சியம்=0.01%
6. பாஸ்பரஸ்=0.04%
7. இரும்புச்சத்து=1 யூனிட்
8. வைட்டமின் சி=300 யூனிட்
இவை அனைத்தும் 100 கிராம் கொய்யாப்பழச்சாறில் உள்ள சத்துக்கள்.
அதில் இருக்கும் மருத்துவ குணங்களைப் பார்ப்போம்.
* உடல் சூட்டைக் குறைக்கும், மூலவியாதி விரட்டும்.
* ஒரே நாளில் மலச்சிக்கல் நீங்கும் .சர்க்கரை நோயாளிகளும் சாப்பிடலாம். குடல் புண்ணைக் குணப்படுத்தும்.
*அமிலத்தன்மை, நெஞ்சு எரிச்சல், புளியேப்பம் விலகும்.
* கண் கோளாறுகள் விலகி, தோல் மினுமினுப்பு தரும்.
* தொப்பையைக் குறைக்கும்
இவ்வளவு மருத்துவ குணம் கொண்ட கொய்யாவை, இனியாவது சுவைத்துப் பார்ப்போம்.