"என்னவளே ! நல்லவளே !
என்ன எழுதுவேன் என தெரியாமலே
எழுத துவங்கிவிட்டேன்
எப்படியும் எழுதியே ஆக வேண்டும்
எனும் ஒரு எழுச்சியில் ..."
எழுச்சியில் துவங்கிய உங்கள் வரிகளை ஆவலாய் படிக்க துவங்கினேன் நானும் மிகுந்த எதிர்பார்ப்புடன் ...."உன் நினைவால், கிறுக்கன்
நான் கிறுக்கும் கிறுக்கல்கள்
எல்லாம் காதல் கவிதைகளாய் ..."
கிறுக்கல்களே இத்தனை அருமை என்றால் .....கவிதைகள் அருமையிலும் அருமையாய் இருக்குமே ??"காணாமலே, உணரவும்
புரியவும் வைத்த என்
காதல் தேவதை நீ ...."
காதலை உங்களுக்கு புரியவைதாளோ உங்கள் தேவதை ??எனக்கு என்னமோ உங்க கிட்ட இருந்து தான் காதலை உணர்ந்திருப்பாள் உங்கள் தேவதைனுதான் தோணுது ... 
.
"உருவமே இல்லாத உன்னத உணர்வு காதல் "
அதற்க்கு எதற்க்கு கண்?"
என்ன அற்புதமான வரிகள் .... பல காதலர்களும் உணரவேண்டிய உன்னதமான.... உயர்வான... உணர்வான வரிகள் இவை .."திகட்டா சுவையை ,தித்திக்கும்
சுவையுடன்,இனிக்கும்
வகையினில் இனிக்க இனிக்க
புகட்டிய,பட்டுக்குட்டி நீ..."
அழகா கொஞ்சவும் செய்றீங்களே...
"என்னென்னவோ என்னை செய்து
என்னை ஈர்த்து விட்ட ஆசையின்
ஆசை லேசாய் கூட
தீரா, ஆசை கிழ பட்டி நீ .."
பட்டு குட்டி சேரி...இதென்ன " கிழ பட்டி நீ .." ??பொறுமை என்பது பொதுவாய் எனக்கு புதிதில்லை
உன் அறிமுகத்திற்கு பின்பு
பொறுமையில் பூமிக்கு போட்டியாய் நான் ....உங்கள் அஞ்சலில் என்னை ஈர்த்த.. நான் மிகவும் ரசித்த அழகான வரிகள் இவை... பொறுமையை இவளோ அழகா யாராலும் வெளிபடுத்த முடியாது...
"கனவுகளுக்குத்தான் கால நேரம் நிர்ணயம்
நினைவுகளுக்கு என்ன, நித்தம்
நித்தம் நினைக்கவேண்டியது தான் ".
உண்மையான வரிகள் ...நினைவுகளுக்கு கால நிர்ணயம் இல்லாம இருக்குறதுனால தான் பிரச்சனைகள் பல இருக்கும் சமயத்திலும் இனிமையான நினைவுகளை நினைவு படுத்தி மன்ம் ஆறுதல் அடையுது ..."உன்னையும் ,உன் மனதையும் மதிப்பதால்
மரபுகளையும் மதிக்கின்றேன்
மானசீகமாய்....."
தங்கள் அன்பின் ஆழத்தின் ஆழத்தை விளக்கும் வரிகள்...."உன் நினைவென்னும் நீச்சல் குளத்தினில்
நீங்காமல் நீந்திட பழகியதால்
வாழ்க்கை கடலில் என்னால்
எதிர் நீச்சலே தடையில்லாமல் இட முடிகின்றது ."
தங்கள்
காதலியின் நேனைவுகளுக்கி இதனை வலிமையா
aatchiriyamaana விஷயம் தான் ..
"உன்னைபற்றி எழுத வேண்டும் என்றால்
இன்னும்எவ்வளவோ இருக்கின்றது...
ஆனால், பதிப்பிட பக்கமும் பத்தாது
படிப்பவர்க்கு, பக்குவமும் பத்தாது என்பதால்
இப்போதைக்கு இந்த காதல் கடிதத்தின்
உரைக்கு, இனிமையான உன் நினைவோடு
திரை இடுகிறேன்"
விட்டா ஒரு புத்தகமே எழுதிடுவீங்க போல?? 
.
உணர்வுபூர்வமான காதல் அஞ்சல்.. ..இவளோ அழாக காதலின் மேன்மையே ..உணர்வை வெளிபடுத்திருகீங்க...
அதும் உங்கள் இனிமை தமிழில் படிக்க ..அஞ்சலுக்கு மேலும் அழகு சேர்க்கிறது.."என் மனக்குறை அது -அதை தான்
நிறையாக இல்லாவிட்டாலும்
ஒரு அளவிற்கு சொல்ல காத்திருகின்றேன்."
மனதின் குறை என்னவோ??